இந்தியாவில்
பயிற்சி பெற்ற போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டின்
ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருந்த போது ஜெயவர்த்தன அரசுக்குப் பெரும்
நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காக தேசிய பாதுகாப்பு
அமைச்சு என்ற பெயரிலான அமைச்சு ஒன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால்
உருவாக்கப்பட்டது.
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியும், ஐ.தே.க.வில் மிகவும்
செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தவருமான லலித் அத்துலத்முதலி முதலாவது தேசிய
பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும்
நியமிக்கப்பட்டார்.
அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதேபோல, அவரது பரிதாபகரமான முடிவுக்கும் இதுவே காரணமாக இருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரையில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட நாள் முதல் அமைச்சர்களை நியமிப்பதில் பொதுவான அம்சம் ஒன்று காணப்பட்டது. அதாவது நாட்டின் பிரதமராக இருப்பவரே பாதுகாப்பு அமைச்சையும், வெளிவிவகார அமைச்சையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபு ஒன்று பேணப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்கவின் காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலம் வரையில் இந்த மரபு பேணப்பட்டது. குறிப்பிட்ட இரு அமைச்சுக்களின் முக்கியத்துவம் கருதியே பிரதமர் அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மரபு பின்பற்றப்பட்டது.
ஆனால், 1978 இல் இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, அந்த நிலைமையில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தார். வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ்.ஹமீத்தை நியமித்தார்;. ஆனால், பாதுகாப்பு அமைச்சை அவர் தன்வசமே வைத்துக்கொண்டார். 1984 ஆம் ஆண்டில்தான் இந்த நிலை மாற்றப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டார்.
லலித் அத்துலத்முதலியை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிப்பது என ஜனாதிபதி ஜெயவர்த்தன எடுத்த தீர்மானத்துக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது தனக்கு நம்பிக்கையயான ஒருவராக அத்துலத்முதலி செயற்படுவார் என ஜெயவர்த்தன கணக்குப்போட்டிருந்தார். இதனைவிட, ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒரு சிறந்த புத்திஜீவியாக அத்துலத்முதலியே கருதப்பட்டார். இவ்வாறான ஒருவரால்தான் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என்பது ஜெயவர்த்தனவின் கணிப்பு!
அத்துலத்முதலியைப்
பொறுத்தவரையில் அவர் சட்டத்துறையில் புகழ்பெற்ற ஒரு குடும்பத்திலிருந்து
வந்தவர். கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான அத்துலத்முதலி;, பின்னர் லண்டன்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்விகற்று பட்டம் பெற்றவர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர் என்ற
பெருமையும் இவரைச் சாரும். இதன்பின்னர் சிங்கப்பூர் தேசியப்
பல்கலைக்கழகத்திலும், இஸ்ரேலிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம்
ஒன்றிலும் இவர் வரிவுரையாளராகக் கடமையாற்றினார். இதன் மூலம் சர்வதேச
அறிவும், தொடர்புகளும் இவருக்கு இருந்தது.
இதனைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவின் காய்நகர்த்தல்களை முறியடித்து, தமிழ்ப் போராளிகளையும் தோற்கடிக்க முடியும் என ஜெயவர்த்தன கருதினார். இலங்கையில் இடம்பெற்ற போரைப் பொறுத்தவரையில் லலித் அத்துலத்முதலியின் இந்த நியமனம் மிகவும் முக்கியமானது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் முதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான அத்துலத்முதலிக்கு உடனடியாகவே வர்த்தக கப்பல்துறை அமைச்சை ஜெயவர்த்தன வழங்கினார். ஜெயவர்த்தனவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சரா இவர் உயர்த்தப்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவர்களாகும். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்படவேண்டியவர் ரவி ஜயவர்த்தன. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் மகனான இவர், ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். தமிழ் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட எஸ்.ரி.எப். எனப்படும் விஷேட அதிரடிப்படையின் பிதா மகனும் இவர்தான். வெளிநாடுகள் பலவற்றுடன் இராணுவ ரீதியான உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் திரைமறைவில் செயற்பட்டவர் இவர்தான். இதனைவிட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் சேபால ஆட்டிகலை நியமிக்கப்பட்டார். இதற்கு மேலாக ஜெனரல் சிறில் ரணதுங்கவும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டடார். கலாநிதி விக்கிரம வீரசூரிய அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவ்விதம் தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கு பலமான ஒன்றாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு உருவாக்கப்பட்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக என உருவாக்கப்பட்ட முதலாவது பலம்வாய்ந்த ஒரு அமைப்பு வடிவமாக இந்த அமைச்சைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னைய காலகட்டங்களில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவம் ஏவிவிடப்பட்டபோதிலும், அரசியல் பின்னணியுடனான சரியான வழிநடத்தல் அதற்கு இருக்கவில்லை.
இந்தியாவின்
பின்னணியுடன் தமிழ்ப் போராளிகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள
நிலையில், அதனைக் கையாள்வதற்கு கட்டுறுதிவாய்ந்த பொறிமுறை ஒன்றின்
அவசியத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தன உணர்ந்திருந்தார். இவ்வாறான ஒரு பொறிமுறை
உருவாக்கப்பட்டு தமிழ்ப் போராளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்பதையும் ஜெயவர்தன உணர்ந்திருந்தார்.
குறிப்பாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதையும் அவர் தெரிந்திருந்தார். இந்த நிலை நாட்டின் பிரிவினைக்கு வழிவிடுவதாக அமைந்துவிடலாம் எனவும் அவர் அஞ்சினார். இந்தப் பின்னணியில் தன்னுடைய நெருங்கிய ஆலோசகர்களுடன் நடத்திய ஆலோசனைகளையடுத்தே அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சை உருவாக்குவது என்ற தீர்மானத்தை எடுத்தார்.
இருந்தபோதிலும், இந்த அமைச்சு உருவாக்கப்பட்டமை தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் பழைமையான மரபு ரீதியான தேசிய பாதுகாப்புப் பொறிமுறைக்குப் புத்துயிரளித்து, அதனை மேம்படுத்துவதற்க புதிய அமைச்சின் உருவாக்கம் துணை புரிவதாக அமைந்திருந்த போதிலும், இது அரசியல் - இராணுவ ரீதியிலான ஒரு உபாயத்தை வகுத்துச் செயற்படுவதற்கு எந்த வகையிலும் உதவவதாக அமைந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் ஆதரவுடன் மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியும், தீவிரவாத அமைப்புக்களும் செயற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அரசியல் - இராணுவ ரீதியிலான இரட்டை அணுகுமுறை ஒன்றே அவசியமானதாக இருந்துள்ளதாக இந்த விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், அவ்வாறானதொரு அணுகுமுறையை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட அத்துலத்முதலி கொண்டிருக்காததது முக்கியமான குறைபாடாகவே இந்த விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்தவரையில் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம், மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்ற தீவிரமான இராணுவக் கண்னோட்டமே காணப்பட்டது.
அதேவேளையில், முக்கியமானதொரு விடயத்தையும் தேசிய பாதுகாப்பு அமைச்சு அடையாளம் கண்டிருந்தது எனக் குறிப்பிடமுடியும். அதாவது இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளே இலங்கைக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்பதாலும், இந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்தும் உபாயம் ஒன்றை அவர்கள் கையாள்வதாலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தைத் தடை செய்வது அத்துலத்முதலியின் முதலாவது திட்டமாக இருந்தது. இதற்காக கடல் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு அறிவித்தது. கடற்படை உஷார் படுத்தப்பட்டு களத்தில் இறக்கப்பட்டது.
அமைதியாக இருந்த பாக்கு நீரிணையின் நீலக்கடலில் செங்குருதி பாய்ந்தோடுவதற்கும் அத்துலத்முதலியின் இந்த நடவடிக்கைதான் காரணமாக இருந்தது.
source: http://www.pooraayam.com/mukiaya/3638-eelamindia17.html
அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதேபோல, அவரது பரிதாபகரமான முடிவுக்கும் இதுவே காரணமாக இருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரையில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட நாள் முதல் அமைச்சர்களை நியமிப்பதில் பொதுவான அம்சம் ஒன்று காணப்பட்டது. அதாவது நாட்டின் பிரதமராக இருப்பவரே பாதுகாப்பு அமைச்சையும், வெளிவிவகார அமைச்சையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபு ஒன்று பேணப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்கவின் காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலம் வரையில் இந்த மரபு பேணப்பட்டது. குறிப்பிட்ட இரு அமைச்சுக்களின் முக்கியத்துவம் கருதியே பிரதமர் அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மரபு பின்பற்றப்பட்டது.
ஆனால், 1978 இல் இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, அந்த நிலைமையில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தார். வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ்.ஹமீத்தை நியமித்தார்;. ஆனால், பாதுகாப்பு அமைச்சை அவர் தன்வசமே வைத்துக்கொண்டார். 1984 ஆம் ஆண்டில்தான் இந்த நிலை மாற்றப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டார்.
லலித் அத்துலத்முதலியை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிப்பது என ஜனாதிபதி ஜெயவர்த்தன எடுத்த தீர்மானத்துக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது தனக்கு நம்பிக்கையயான ஒருவராக அத்துலத்முதலி செயற்படுவார் என ஜெயவர்த்தன கணக்குப்போட்டிருந்தார். இதனைவிட, ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒரு சிறந்த புத்திஜீவியாக அத்துலத்முதலியே கருதப்பட்டார். இவ்வாறான ஒருவரால்தான் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என்பது ஜெயவர்த்தனவின் கணிப்பு!
இதனைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவின் காய்நகர்த்தல்களை முறியடித்து, தமிழ்ப் போராளிகளையும் தோற்கடிக்க முடியும் என ஜெயவர்த்தன கருதினார். இலங்கையில் இடம்பெற்ற போரைப் பொறுத்தவரையில் லலித் அத்துலத்முதலியின் இந்த நியமனம் மிகவும் முக்கியமானது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் முதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான அத்துலத்முதலிக்கு உடனடியாகவே வர்த்தக கப்பல்துறை அமைச்சை ஜெயவர்த்தன வழங்கினார். ஜெயவர்த்தனவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சரா இவர் உயர்த்தப்பட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவர்களாகும். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்படவேண்டியவர் ரவி ஜயவர்த்தன. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் மகனான இவர், ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். தமிழ் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட எஸ்.ரி.எப். எனப்படும் விஷேட அதிரடிப்படையின் பிதா மகனும் இவர்தான். வெளிநாடுகள் பலவற்றுடன் இராணுவ ரீதியான உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் திரைமறைவில் செயற்பட்டவர் இவர்தான். இதனைவிட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் சேபால ஆட்டிகலை நியமிக்கப்பட்டார். இதற்கு மேலாக ஜெனரல் சிறில் ரணதுங்கவும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டடார். கலாநிதி விக்கிரம வீரசூரிய அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவ்விதம் தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கு பலமான ஒன்றாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு உருவாக்கப்பட்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக என உருவாக்கப்பட்ட முதலாவது பலம்வாய்ந்த ஒரு அமைப்பு வடிவமாக இந்த அமைச்சைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னைய காலகட்டங்களில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவம் ஏவிவிடப்பட்டபோதிலும், அரசியல் பின்னணியுடனான சரியான வழிநடத்தல் அதற்கு இருக்கவில்லை.
குறிப்பாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதையும் அவர் தெரிந்திருந்தார். இந்த நிலை நாட்டின் பிரிவினைக்கு வழிவிடுவதாக அமைந்துவிடலாம் எனவும் அவர் அஞ்சினார். இந்தப் பின்னணியில் தன்னுடைய நெருங்கிய ஆலோசகர்களுடன் நடத்திய ஆலோசனைகளையடுத்தே அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சை உருவாக்குவது என்ற தீர்மானத்தை எடுத்தார்.
இருந்தபோதிலும், இந்த அமைச்சு உருவாக்கப்பட்டமை தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் பழைமையான மரபு ரீதியான தேசிய பாதுகாப்புப் பொறிமுறைக்குப் புத்துயிரளித்து, அதனை மேம்படுத்துவதற்க புதிய அமைச்சின் உருவாக்கம் துணை புரிவதாக அமைந்திருந்த போதிலும், இது அரசியல் - இராணுவ ரீதியிலான ஒரு உபாயத்தை வகுத்துச் செயற்படுவதற்கு எந்த வகையிலும் உதவவதாக அமைந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் ஆதரவுடன் மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியும், தீவிரவாத அமைப்புக்களும் செயற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அரசியல் - இராணுவ ரீதியிலான இரட்டை அணுகுமுறை ஒன்றே அவசியமானதாக இருந்துள்ளதாக இந்த விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், அவ்வாறானதொரு அணுகுமுறையை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட அத்துலத்முதலி கொண்டிருக்காததது முக்கியமான குறைபாடாகவே இந்த விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்தவரையில் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம், மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்ற தீவிரமான இராணுவக் கண்னோட்டமே காணப்பட்டது.
அதேவேளையில், முக்கியமானதொரு விடயத்தையும் தேசிய பாதுகாப்பு அமைச்சு அடையாளம் கண்டிருந்தது எனக் குறிப்பிடமுடியும். அதாவது இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளே இலங்கைக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்பதாலும், இந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்தும் உபாயம் ஒன்றை அவர்கள் கையாள்வதாலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தைத் தடை செய்வது அத்துலத்முதலியின் முதலாவது திட்டமாக இருந்தது. இதற்காக கடல் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு அறிவித்தது. கடற்படை உஷார் படுத்தப்பட்டு களத்தில் இறக்கப்பட்டது.
அமைதியாக இருந்த பாக்கு நீரிணையின் நீலக்கடலில் செங்குருதி பாய்ந்தோடுவதற்கும் அத்துலத்முதலியின் இந்த நடவடிக்கைதான் காரணமாக இருந்தது.
source: http://www.pooraayam.com/mukiaya/3638-eelamindia17.html
No comments:
Post a Comment