மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வழங்கும் மேற்கு சிட்னியின்
சிறந்த பெண்களுக்கான விருது முதல் முறையாக தமிழ்ப் பெண்ணுக்குக்
கிடைத்துள்ளது.
வழக்கறிஞர் டாக்டர் சந்திகா சுப்ரமண்யன் இந்த ஆண்டுக்கான சிறந்த சட்ட சேவைக்காக இவ் விருதைப் பெற்றிருக்கிறார்.
இவ் விருது சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பல துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு மேற்கு சிட்னியில் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டும் முகமாக மேற்கு சிட்னிப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த மற்றும் அகதி மக்களுக்கு சட்டத் துறையில் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் ஆற்றிவரும் அளப்பய சேவையைப் பாராட்டி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசியர் ஜெனிஸ் ரேட் இவ்விருதினை வழங்கினார். பல்கலைக்கழக விழா மண்டபத்தில் காவல்துறை அதிகாரி டெபொரா வலஸ் தலைமையில் இவ்விழா நடந்தது. கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் மேற்கு சிட்னிப் பொது மக்களுக்கு தன சோமா அமைப்பின் மூலம் இலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ஆயிரக் கணக்கான பல்லின பல் கலாசார மக்களுக்கு இதன் மூலம் பயன் கிட்டுகிறது குறிப்பாக பெண்கள் இந்த சேவையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.
சந்திரிகா சுப்ரமண்யன் 2009 ஆம் ஆண்டில் நியு சவுத் வேல்ஸ் சட்டம் மற்றும் நீதி அமைப்பின் ஜஸ்டிஸ் விருதுக்கு தெரிவு பெற்றவர். 2011 ஆம் ஆண்டில் இவருக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சேவை விருதை சட்ட வல்லுனர் சங்கம் பெண்கள் சட்ட அமைப்பும் இணைந்து வழங்கின.
கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ் விருதைப் பெறும் முதல் தமிழ்ப் பெண் வழக்குரைஞர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் ஆவார்.
இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திகையாளராகவும் ஊடகத் துறையில் ஆய்வாளராகவும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணி செய்தவர்.
1989 இல் இவர் எழுதிய மக்கள் தொடர்பு சாதனம் மகளிரும் என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது கிட்டியுள்ளது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
1997 இல் சிட்னிக்குப் புலம்பெயர்ந்த பின்னர் புலம்பெயர்ந்தவர்க்கான சேவை நிலையங்களில் பணி புரிந்தார். பின் மைக்ரொசொஃப்ட் அங்கீகக்ரிகப்பட்ட கம்பியூட்டர் மென் பொருள் பணி பயிற்சியாளராகவும் இரட்டை கலாசாரத் துறையில் சிறப்பு பயிற்சியாளராகவும் பணி புரிந்து பின் சமூகத்தில் பெண் வழக்கறிஞர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார். தற்போது பரமற்றாவில் சக்ஸஸ் லாயர்ஸ் அண்ட் பஸ் டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக் கழகம் மற்றும் டேஃப் கல்லூகளில் சட்ட ஆசிரியராகவும் பணி புரிகிறார்.
source: http://akkinikkunchu.com/

No comments:
Post a Comment