Saturday, April 14, 2012

புத்தாண்டு கால விபத்துக்களால் 223 பேர் தேசிய வைத்தியசாலையில்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 223 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.13 ஆம் திகதி அதிகாலை தொடக்கம் 24 மணி நேர காலப்பகுதிக்குள் 223 பேர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து 33 நோயாளர்கள் அவசர சிகிச்சை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

வாகன விபத்துகள் காரணமாக 43 பேரும், வீட்டு விபத்துகள் காரணமாக 31 பேரும், வன்முறைச் சம்பவம் காரணமாக 46 பேரும், பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்து காரணமாக இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஏனைய விபத்துகள் மற்றும் சிறு விபத்துகள் காரணமாக 82 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12778----223---.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator