Saturday, April 28, 2012

கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாகிறது ரெசோ – வரும் 30ம் நாள் முதல் கூட்டம்

தமிழீழத்தை உருவாக்குவதற்காக, தமிழ்நாட்டில் ரெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர் இயக்கத்தை மீண்டும் வரும் திங்கட்கிழமை உருவாக்கப் போவதாக திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

வரும் 30ம் நாள் திங்கட்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

ரெசோவுக்கு தலைமையேற்கவுள்ள, மு.கருணாநிதி தலைமையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.


இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலர் அன்பழகன், திராவிடர் கழக பொதுச்செயலர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழர் பேரவைத் தலைவர் சுப வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழீழத்தை உருவாக்க காந்தி, அண்ணா, தந்தை செல்வாவில் வழியில் தான் போராட்டப் போவதாகவும், தமிழீழத்தை உருவாக்கி விட்டே உயிர் துறப்பேன் என்றும் மு.கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source:http://www.puthinappalakai.com/images/t/tamilnadu/kalainger%20karunanithi.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator