Saturday, April 21, 2012

கொழும்பு பொரல்லை தெமட்டக்கொடப் பகுதிகளில் தேடுதல் 33பேர் கைது – பிரதேசத்தில் பதட்டம்:-

பாதுகாப்பு தரப்பினர் கொழும்பு பொரல்லை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் ஒன்றில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 33 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
இன்று அதிகாலை 5.30 முதல், காலை8 மணி வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்,  தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என 33 பேர் இதன் போது கைதுசெய்யப்பட்டனர். காவற்துறையினரும்,அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தேடுதல் வேட்;டையை நடத்தியதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை தெமட்டக்கொட பகுதியில் பதற்ற நிலைமை
தெமட்டகொட பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது சிலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதுகளுக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் மற்றும் நீர்த்தாரைகளையும் பயன்படுத்தியுள்ளனர். போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தெமட்டகொடப் பகுதியில் விசேட தேடுதல் வேட்டையொன்றை நடத்தியுள்ளனர்.
 
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்களும், சந்தேகத்திற்கு இடமானவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிலரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மீது மக்கள் கற்களை எறிந்து தமத எதிர்ப்பை வெளியிட்டனர். சில வாரங்களுக்கு முன்னர் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களும், பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
நிலைமை கட்டுப்பாட்டு;க்குள் கொண்டு வரப்படடுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: http://www.globaltamilnews.net

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator