பேஸ்புக்,
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலையமைப்புகள் மற்றும் இணையத்தளக் குற்றங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 15ஆம்
திகதி வரையிலான மூன்றரை மாதக் காலப்பகுதியில் 800இற்கும் அதிகமான
முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப
முகவர் நிலையத்தின் கீழ் இயங்கும் கணினி அவசர பொறுப்புக் கூறலுக்கான
தயார்நிலைக் குழு அறிவித்துள்ளது.
இணையத்தளங்களினூடான பாலியல் குற்றங்கள் மற்றும் பலாத்காரமாக பணம் பறித்தல் தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றில் பேஸ்புக் தொடர்பான குற்றச் செயல்களே அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் அக்குழுவின் செயற்றிட்ட முகாமையாளர் லக்ஷான் சொய்சா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
"கணினிக் குற்றங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினரே பாதிப்படைகின்றனர். தனிப்பட்ட விபரங்களை வெளியிடுதல், பலாத்காரமாக பணம் வசூலித்தல், இணைய வங்கியியல் கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் குறித்து பதின்ம வயதினரிடையே போதியளவு அறிவின்மையும் இதற்குக் காரணமாகும். இதனால் பாலியல் ரீதியிலான குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக 13 முதல் 15 வரையான வயதினர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
தங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில் வெளியிடப்படுவதாக பெற்றோர் எம்மிடம் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். அவ்வாறான குற்றச் செயல்கள் குறித்து நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கிறோம். எனினும் தனிப்பட்ட தகவல்களை இணையத்தளங்களில் பரிமாறுவது குறித்து பெற்றோரும் பிள்ளைகளும் அவதானத்துடன் செயற்படுதல் அவசியமாகும்.
இணைய வங்கியியலை மேற்கொள்ளும் வங்கி வாடிக்கையாளர்களை போலியான தகவல் வழங்கி ஏமாற்றுவோர் தொடர்பில் விழிப்புணர்வு அவசியமாகும். அவ்வாறு ஏமாற்றுவோரிடம் சிக்கி பெருந்தொகையான பணத்தை இழந்தோரும் இருக்கிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கணினிக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 011 2691692 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது slcert@cert.gov.lk என்ற முகவரியினூடாக கணினி அவசர பொறுப்புக் கூறலுக்கான தயார்நிலைக் குழுவுக்குத் தெரிவிக்கலாம். ___
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37634

No comments:
Post a Comment