Friday, April 27, 2012

பாகிஸ்தான் விமானத்தை கடத்துவதாக மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்

பாகிஸ்தானின் முன்னோடி விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்சின் விமானம் கராச்சி விமான நிலையத்திலிருந்து பகவல்பூர் வரை செல்வதற்காக புறப்பட்டது.
 
இதில் பயணித்த ஒருவர் விமானத்தை கடத்தப்போவதாக கூறியதை தொடர்ந்து விமானப் பணிப்பெண் பைலட்டிடம் தகவல் கூறினார். இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
 
விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு குறிப்பிட்ட அந்த பயணியை போலீசார் கைது செய்ததோடு விமானத்தையும் சோதனையிட்டனர். கைது செய்த பயணியிடம் விசாரித்த போது, விமான பணிப்பெண்ணிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இஸ்லாமாபாத் அருகே ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில் 127 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.maalaimalar.com/2012/04/27171739/pakistan-plane-hijack-threat-l.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator