யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஜேவிபி மாற்றுக் குழு
உறுப்பினர்களான லலித்குமார், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
கருத்தப்பட்ட புறக்கோட்டை, சிறிலங்கா காவல்துறை புனர்வாழ்வுப் பிரிவு
கட்டடத்தில் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் திடீர் தேடுதல்
நடத்தியுள்ளனர்.
காணாமற்போயுள்ள இருவரும் இந்தக் கட்டடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, நேற்றுமுன்தினம் தாம் அங்கு திடீரெனச் சென்று தேடுதல் நடத்தியதாகவும், ஆனால் அவர்கள் அங்கு இல்லை என்றும் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் இந்தக் கட்டடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதையடுத்து அதுபற்றி தாமே மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியதாகவும் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர் ருகி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சாமந்தி ஜெயமானவுக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு தேடுதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, காணாமற்போன இவர்கள் இருவரும் இந்தக் கட்டடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண நிராகரித்துள்ளார்.
யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பார்வையிடலாம் என்றும் ஒருவர் கூட அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://thaaitamil.com/?p=15773

No comments:
Post a Comment