Sunday, April 15, 2012

சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது



சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது.

சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை.
http://www.bbc.co.uk...nfighting.shtml

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator