Wednesday, April 25, 2012

இலங்கையில் முதற்தடவையாக பாரிய சரக்குக் கப்பல் நிர்மாணம்

இலங்கை கப்பல் கட்டும் வரலாற்றில் பாரிய சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் ஒன்றை நிர்மாணித்து வருகிறது. இதில் 400 பயணிகளும், 250 தொன் கொள்கலன்களையும் ஏற்றிச் செல்லும் வல்லமையுடன் இந்த பாரிய கப்பல் இந்தியாவில் இயங்கும் ஐக்கிய லக்க்ஷத்திவீப் வலயநிர்வாகத்தால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

 
குறித்த கப்பல் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் கொச்சின் மற்றும் லக்க்ஷத்திவீப் தீவுகளுக்கு இடையிலான கடல் வழிப் போக்குவரத்துச் சேவைகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கப்பல் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இரண்டு யான்மார் இயந்திரங்களால் வலுவூட்டப்படவுள்ளது. இது தவிர, சுவீடன் தயாரிப்பான கட்டுப்பாட்டு அமைப்புகளும் அதில் பொருத்தப்படவுள்ளன.
 
அவற்றுக்கு மேலாகப் பயணிகளுக்குத் தேவையான அலுவலக அறை, தனியான ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 உயர்தர சொகுசு வகுப்புகளும், 450 சொகுசு வகுப்புகளும், 350 சாதாரண சொகுசு அறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.                         
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=427801006725558220

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator