Wednesday, April 25, 2012

இலங்கை மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்!

சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்டு தற்போது தன்சானியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அறுவரும் நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றனர். இலங்கை மீனவர்களான செபஸ்டியன் பெர்னாண்டோ, வீரசேன சில்வா, நிஷாந்த பெர்னாண்டோ, சுசந்த பெர் னாண்டோ, லியோல் ரொட்ரிகோ, பெருமாள் செல்வராஜா ஆகிய அறுவரும் நாளை காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவரென மீன்பிடி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரான லால் டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் கடந்த 20 ஆம் திகதியன்று மீட்கப் பட்டனர். தன்சானியா கடல் எல்லையிலிருந்து 50 மைல் தொலைவில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தன்சானிய கப்பலொன்றின் உதவியுடன் இம்மீனவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப் பட்டன.


இந்நிலையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையமைச்சு தன்சானியா விலுள்ள இலங்கை மீனவர்களை விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இம் மீனவர்கள் இன்று புதன்கிழமை மாலை எமிரேட்ஸ் விமானத்தினூடாக புறப்பட்டு நாளை வியாழக்கிழமை காலை இலங்கை வந்தடையவுள்ளனர்.

இம்மீனவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்கொழும்பிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் களுத்துறையைச் சேர்ந்தவ ரெனவும் அமைச்சின் அதிகாரி கூறினார்.
Source: http://www.irukkiramonline.com/2012/04/news2504201206.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator