Sunday, April 29, 2012

சரத் பொன்சேகாவுக்கு தண்டனைக் குறைப்பு இல்லை – சிறைச்சாலைகள் ஆணையாளர்

Sarath_Fonseka
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்பதால், சிறைக்கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைக்குறைப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
“தனது மருமகனின் நிறுவனத்துக்கு முறைகேடாக கேள்விப்பத்திர உத்தரவு வழங்கிய குற்றச்சாட்டில், சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்தது.
இந்த சிறைத்தண்டனை 2010 ஒக்ரோபரில் ஆரம்பமானது. ஆண்டு மார்ச் மாதமே இது முடிவடைகிறது.

வழக்கமாக தண்டனைக்காலத்தில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு 10 வீத தண்டனைக் குறைப்பு செய்யப்படும்.
ஆனால் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டதால் தண்டனைக்குறைப்புக்கு சரத் பொன்சேகா விண்ணப்பிக்க முடியாது“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக சரத் பொன்சேகாவின் தண்டனைக்காலம் நன்னடத்தை அடிப்படையில் குறைக்கப்படும் என்பதால், 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர் கடந்த வியாழக்கிழமை விடுதலையாவார் என்று கருதப்பட்டது.
Source: http://meenakam.com/2012/04/29/no-sentence-reduction-for-sarath-fonseka-prisons-commissioner.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator