வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார்.
சீனாவில் நடக்கும் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்தியா வரும் வரும் ஹிலாரி, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும், ஜூன் 13ம் தேதி இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட உள்ள
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://nilavaram.com...news&Itemid=463

No comments:
Post a Comment