Thursday, April 12, 2012

இந்திய நாடாளுமன்றக் குழு வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டு வரும் படைமுகாம்கள்



news
வன்னிப்பெருநிலப்பரப்பில் பரந்தன் - முல்லைத்தீவு முதன்மை வீதியில் அமைந்திருந்த சிறிலங்காப் படையினரின் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வேறிடம் மாற்றப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இம்முகாம்களை அகற்றிவிட்டு, பாரிய முகாம் ஏதேனும் அமைக்கும் திட்டத்தை படையினர் கொண்டள்ளனரா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முரசுமோட்டை சந்தியை அண்மித்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்தியை அண்மித்த முகாம், விஸ்வமடு ரெட்பானா முகாம், ஆகிய முகாம்களே அகற்றப்பட்டிருக்கின்றன.

எதிர்வரும் 16ம் திகதி சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள, இந்திய நாடாளுமன்றக் குழு வட பகுதியை நேரில் பார்வையிட்டு தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராயவுள்ளது. இதன் காரணமாகவே படையினர் தமது முகாம்களை அகற்றி தமது பிரசன்னம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது எனக் காட்டும் முகமாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=56067969513791585

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator