Tuesday, April 24, 2012

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாண நிர்வாக அலகு அவசியம் - ஹசன் அலி

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாண நிர்வாக அலகு அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தைப் போன்றதொரு நிர்வாக அலகு முஸ்லிம்களுக்கு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, வீடமைப்பு, பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு பதிவுகள், சொத்து பறிமுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்தைத் தாண்டிய அதிகார அலகு ஒன்றையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு மாகாணம் என்ற பெயரில் ஓர் மாகாண அலகு உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளை ஒன்றிணைத்து இந்த நிர்வாக அலகு உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
source: http://www.globaltamilnews.net

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator