Monday, April 16, 2012

சுனாமி எச்சரிக்கை அன்ரனாவை திருடிய மீனவர்கள் கரைக்கு வந்த போது கைது

இந்து சமுத்திரத்தில் மிதக்கவிடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை அன்டனாவைத் திருடியது தொடர்பாக தேடப்பட்டு வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கடல் பகுதியிலேயே சுற்றித் திரிந்த இவர்கள் கடந்த 11 ஆம் திகதி சுமத்திரா தீவு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைடுத்து தென்பகுதி கரைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்கள் 5 பேரும் தெவிநுவர துறைமுகத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருந்த போது அழகான உபகரணமொன்றை கண்டதாகவும், அது சுனாமி எச்சரிக்கை உபகரணம் என்பதனை அறிந்திருக்க வில்லையெனவும் அதனால் அதனை எடுத்து வந்து விட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை, காணாமல் போயிருந்த இந்த உபகரணம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் வழங்கிய தகவல்களுக்கமைய கடந்த 24 ஆம் திகதி கந்தர பொலிஸாரினால் இந்த உபகரணம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்தே சந்தே நபர்கள் தலைமறைவாகியிருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் நேற்று திங்கட்கிழமை மாத்தறை மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஐவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12926-2012-04-16-19-34-12.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator