கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம்
தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து
கடந்த நவம்பர் மாதம் 18-ந் திகதியுடன் நிறுத்தப்பட்டது.
.
இந்தநிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் வரும்
19-ந் திகதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்பு கழகம் அறிவித்தது.
சிறிலங்கா ஆட்சியாளர் மீதான எதிர்ப்பும் இந்த பயண புறக்கணிப்பிற்கு
முக்கிய காரணங்களில் ஒ ன்றாகும். சிறிய கப்பல் இயக்கப்படும் என்ற
அறிவிப்புக்கு பிறகு இலங்கை செல்ல இதுவரை யாருமே முன்பதிவு செய்யவில்லை.
மேலும் இலங்கைக்கு செல்ல வேண்டுமென்றால் சென்னையில் உள்ள இலங்கை
தூதரகத்தில் முன் கூட்டியே விசா பெறவேண்டும் என்ற நிலை கடந்த ஜனவரி மாதம்
முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனாலும் கப்பலில் செல்ல மக்கள் அதிகம்
ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
.
இது துறைமுக நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ந் திகதி தூத்துக்குடி- கொழும்பு இடையே கப்பல்
போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
தமிழக மக்களின் புறக்கணிப்பால் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள்
கப்பல் போக்குவரத்து சேவை கைவிடப்படும் நிலையில் உள்ளது. கப்பல் பயணிக்க
தயார் என்ற போதிலும் பயணிகள் எவரும் ஆர்வம் காட்டவில்லை,
source: http://www.pathivu.com/news/20604/57//d,article_full.aspx
No comments:
Post a Comment