Thursday, April 12, 2012

ஃபேஸ்புக்கில் மாணவர்களுக்கான பிரத்யேக பக்கம்

Facebook’s Back to its School Days, Launches a ‘Groups For Schools’ Feature
பள்ளி மாணவர்களுக்காக குரூப்ஸ் ஃபார் ஸ்கூல்ஸ் என்ற புதிய வசதியை வழங்க உள்ளது ஃபேஸ்புக். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் ஃபேஸ்புக் ஈர்த்து வருகிறது என்பதற்கு ஒரு பெரிய ஆதாரத்தினை வழங்க உள்ளது ஃபேஸ்புக்.

ஆம்! ஆறில் இருந்து அறுபது வரை என்பதற்கு ஏற்ப, இனி பள்ளி மாணவர்கள் குரூப்ஸ் ஃபார் ஸ்கூல்ஸ் என்ற வசதியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பு சம்பந்தமான பல தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும்.
அது மட்டும் அல்லாமல் இந்த குழுவில் இணைந்துள்ளவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை எளிதாக டவுன்லோட் செய்யவும் முடியும். இந்த குரூப் ஸ்கூல் பக்கத்தில் உள்ள அனைத்து ஃபைல்களையும், ஒரு க்ளிக் செய்வதன் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஃபேஸ்புக்கில் இணைந்து இருந்தாலும், இப்போது பள்ளி மாணவர்களுகென்றே பிரத்தியேகமாக குரூப்ஸ் ஃபார் ஸ்கூல்ஸ் என்று ஒரு வசதி உருவாக்கப்பட்டு இருப்பது உண்மையில் ஒரு சிறப்பான விஷயம் தான்.
இனி ஆறில் இருந்து அறுபது வரை என்ற வாக்கியத்திற்கு ஃபேஸ்புக் பொருத்தமான சமூக வலைதளம்தான்.
Source:http://tamil.gizbot.com/social-media/facebooks-back-to-its-school-days-launches-a-groups-for-schools-feature

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator