Saturday, April 21, 2012

பொரளையில் பொலிஸார் - பொதுமக்கள் மோதல்; கண்ணீர்ப்புகை பிரயோகம்

தெமடகொட, வனாதமுல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பேஸ்லைன் வீதியில் பல மணிநேரங்கள் வரை பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு அதனூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.


இன்று காலை, பொரளை, ரீ – 20 தோட்டப்பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிலைமையைக்
Source: http://www.tamilmirror.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator