மகப்பேரின்மையால் அவதிப்பட்டு வரும் கனடிய தம்பதியினர் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளை அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க முட்டை வங்கிக்கு பணம் செலுத்தி விட்டால் உடனடியாக கருமுட்டை கனடிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் கனடாவிலேயே தம்பதிகள் வைத்தியத்தை தொடர்ந்து கொள்ளலாம். இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இது போன்ற முன்னேற்றங்களை கனடாவில் வசிக்கும் பல தம்பதிகள் பாராட்டியுள்ளனர்.
மனித கருமுட்டைகளை தானமாக அளிப்பது கனடாவில் சட்டத்திற்கு புறம்பான் ஒரு செயலாக கருதப்பட்டு வருவதால் மகப்பேரின்மை சிகிச்சைகளை எடுத்து வரும் கனடிய தம்பதியினர் பல இடர்பாடுகளை அனுபவித்து வந்தனர்.
தற்போது கிடைத்துள்ள வாய்ப்பின் மூலமாக அமெரிக்க கரு முட்டை வங்கியில் அளிக்கப்படும் பட்டியலில் இருந்து தங்களுக்கு தேவையான கரு முட்டை தானமளிப்போரை தம்பதிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு கரு முட்டையின் விலை $12,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Source: http://www.ekuruvi.com/newsimage/fertiled%20egg.JPG
No comments:
Post a Comment