மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முருங்கன் கிராமத்தில் 2 இடங்களில் படையினர் பாரிய படை முகாம்களை அமைத்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முருங்கன் பஸார் பகுதியில் 14 ஆம் கட்டை வாய்க்காளுக்கு அருகாமையில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.இதே சமயம் முருங்கன் செம்மண் தீவு பெரிச்சர் கட்டு குளக்காணியில் சுமார் 4 ஏக்கர் பிடிக்கப்பட்டு படையினர் பாரிய படை முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.
குளக்காணியை பிடித்துள்ளமையினால் விவசாயிகள் நீரை பெற்றுக்கொள்வதில் எதிர்வரும் காலங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-தற்பொது சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் படையினர் குறித்த பாரிய முகாம்களை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதி மக்களும் குறிப்பாக பெண்களும் அச்சத்தில் காணப்படுகின்றார்கள்.
தற்போது மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலையில் அச்சத்தில் உள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் தலையிட்டு குறித்த காவலரண்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
Source: http://meenakam.com/2012/05/14/two-new-military-camp-in-mannar-murunkan-system.html#more-44537
No comments:
Post a Comment