லக்னோ: மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை அந்தஸ்து எப்போது வழங்கப்பட்டது
என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்த
மாணவிக்கு இது குறித்த தகவல் இல்லை என்ற பதிலே தகவல் ஆணையத்திடம் இருந்து
கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா பரஷ்ஹார் (10 வயது).
இவர் அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். மகாத்மா
காந்திக்கு தேசத்தந்தை என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து 6 ஆம் வகுப்பு
மாணவி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்
கடந்த பெப்ரவரி மாதம் மத்திய தகவல் அறியும் ஆணையருக்கு அனுப்பிய மனுவில்
இந்தியாவின்
