சாலையில் நடந்து செல்லும்போது கூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.
“அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள்.
