04/16/2012:மன்னார் வங்காலைப்பாடு மீனவ கிராமத்தினுள் உள்ள வீடு ஒன்றினுள்
கடற்படையினன் ஒருவன் நிர்வாண கோலத்துடன் நுழைந்த சமயம் குறித்த
கடற்படையினனை அப்பகுதி மக்களினால் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்
பெற்றுள்ளது என மன்னாரில் இருந்து சங்கதியின் செய்தியாளர்
தெரிவிக்கின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் வாங்காலைப்பாடு மீனவ கிராமம்
அமைந்துள்ளது. குறித்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வழ்ந்து
வருகின்றனர். ஆண்கள் தொழிலுக்குச் செல்லும் போது பெண்கள் தனிமையாக இருப்பது
வழமை. இந்த நிiயில் சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த
கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் கடல் தொழிலுக்குச் சென்று விட்டனர்.
இதன் போது குறித்த கடற்படையினன் மது போதையுடன் அப்பகுதியில் தனிமையாக உள்ள
பெண் ஒருவருடைய வீட்டினுள் நிர்வாணமாக நுழைந்துள்ளார். இதன் போது குறித்த
நபரை திடீர் என கண்ட குறித்த பெண் கத்தி சத்தம் பேட்டுள்ளார். இதன் போது
குறித்த கடற்படையினன் கையில் வைத்திருந்த தனது ஆடைகளுடன் நிர்வாண
கோலத்துடன் ஓடியுள்ளார்.
இதன் போது தொழிலுக்குச் சென்ற மீனவர்களும் கரைக்கு வந்த நிலையில் குறித்த
கடற்படையினனை நிர்வாண கோலத்துடன் மடக்கிப்பிடித்து கடுமையாக
தாக்கியுள்ளனர்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த கடற்படை அதிகாரி நடந்தவற்றை கேட்டறிந்தார்.
பின் குறித்த கடற்படையினனை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினார். பின் பொது
மக்களிடம் குறித்த கடற்படை அதிகாரி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாணக்கோலத்துடன் பிடிக்கப்பட்ட கடற்படையினனை கடற்படை
அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் இடம் பெறுகின்றமை
தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக வங்காலைப்பாடு மீனவ கிராம மக்கள்
தெரிவித்துள்ளனர்.
I appreciate the the good quality of the Navy officer who apologized and request him to take stern action on the culprit in order give lessons to others.
Aniyaayatthai thatti ketkum mana nilai valarvathu paaraatta thakkathu. Vankalai makkal thunivaanavarhal.
ReplyDeleteKadat padai athihaariyin mannippu ketkum panpu paaraattapada vendiyathu. Athe velai avvathihaari akkutravaali mel kadumaiyaana nadavadikkai edukka vendum. Appothutaan matravarhalukkum oru padamaaha irukkum.
I appreciate the the good quality of the Navy officer who apologized and request him to take stern action on the culprit in order give lessons to others.