பிரிதொரு நபருடைய வெளிநாட்டு அனுமதிச்
சீட்டை சமர்பித்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இளம் யுவதியும் அவருக்கு
உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று 23ம் திகதி அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய
நிலைய அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் இணைந்து குறித்த
சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 21 வயது
யுவதியும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் இவ்வாறு கைது
செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர் இருவரும் நீர் கொழும்பு நீதவான்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது யுவதி பிணையில் விடுதலை
செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் எதிர்வரும் மே 7ம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்Source: http://meenakam.com
No comments:
Post a Comment