Saturday, April 28, 2012

தம்புள்ள மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட தாக்கங்களும் மற்றும் கிளைவிட்ட பிரச்சினைகளும்

      சுரேந்திர அஜித் ரூபசிங்க இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) செயலாளர்
dambulla demo2012 ஏப்ரல் 20,வெள்ளியன்று, பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2,000 பேர் வரையிலான ஒரு கும்பல் மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசலை ஆக்கிரமித்து அதனை சூறையாடியதுடன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தியது.
காவல்துறையினர், மற்றும் சிறப்பு பணிப் படையினர் ஆகியோர்களால்கூட அந்தக் குழப்பத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த பள்ளிவாசல் பௌத்த புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள ஓரிடத்தில் கட்டப்பட்டுள்ளது என்கிற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு முன்தினம் ஒரு பெற்றோல் வெடிகுண்டு அங்கு வெடிக்க வைக்கப்பட்டது ஆயினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலின்மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம் பெற்ற தாக்குதலாகும் ,கடந்த செப்ரம்பர் மாதம் பௌத்த பிக்குகள் தலைமையிலான கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியது, மற்றும் நாட்டின் பலபாகங்களிலுமுள்ள கிறீஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மத நிறுவனங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன - இவை அனைத்தும் தண்டனையிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன.

கடந்த திங்களன்று மத விவகாரங்களுக்கான அமைச்சர், அந்தப் பிரதேசத்திற்கு அருகாமையிலுள்ள பள்ளிவாசலையும் மற்றும் ஒரு இந்து ஆலயத்தையும், இடித்து அகற்றும்படியும்,அவற்றை வேறு இடத்தில் நிர்மாணிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். இப்போதுவரை இந்த முடிவுக்கு தான் உடந்தையாக இருப்பது சம்பந்தமாக ஜனாதிபதி எதுவும் கூறவில்லை. இந்தப் பள்ளிவாசல் அந்த இடத்தில் 1964ம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், இஸ்லாமிய பக்தர்கள் தங்கள் மத வழிபாடுகளை இங்கு தொடர்ந்து நடத்திவருகிறார்கள் என்கிற உண்மையை புறந்தள்ளி இந்த முடிவு மேற் கொள்ளப் பட்டுள்ளது.
இந்தியாவில் அயோத்தியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் மசூதி 1992ல் இந்துமத வெறியர்களால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து அரசின் அனுசரணையுடன் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல்கள்,வெகுஜனப் படுகொலைகள், கும்பல்களாக பாலியல் வன்முறைகள் போன்றவை ஒரு தசாப்தத்துக்கு முன்னர் கோவாவில் இடம்பெற்றதைப்போன்ற அரக்கத்தனமான முன்னேற்றங்களுக்கு இந்த தாக்குதல் சம்பவம் வழியமைத்து விடாது என நாம் நம்புவோமாக. தம்புள்ளயில் நடைபெற்ற சமீபத்தைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சாத்தியமான அரக்கத்தனமான செயல்கள் இடம்பெறலாம் என்பதற்கு கட்டியம் கூறுகிறது.
அந்த தாக்குதலுக்கு தலைமைதாங்கிய தம்புள்ள ரஜ மகா விகாரையின் பிரதான துறவி, அவர்முன் கெஞ்சி நின்ற அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரிடம் அந்த இந்துக் கோவில் உடைக்கப்படாவிட்டால், அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அச்சுறுத்தியுள்ளார். அதற்கு மேலும் அச்சுறுத்தும் வகையில், பிரதான பிக்குவுடன் நின்ற மற்றொரு முன்னணிப் பிக்கு, இதன்பின்னர் “எந்த ஒரு முஸ்லிமும் இந்தப் பிரதேசத்தில் சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதிக்கப்பட மாட்டார்” என்கிற ஒரு அறிவிப்பை (அவர்களது பக்தர்கள் பெருங்களிப்புடன் மகிழ்ச்சி பொங்க சாது சாது என கோஷமிட ) வாசித்தார்.
பௌத்த புனித பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடத்தில் வேறு எந்த மதத்தைdambulla demo-1 சேர்ந்த வழிபாட்டு தலமும் இருப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும் அவர் அறிவித்தார் ,இந்த ஆவணம் நீதித்துறையினதோ அல்லது ஜனாதிபதியினதோ சம்மதமோ அல்லது பிரசன்னமோ இல்லாமல் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. துறவிகள் வெளிப்படுத்திய சுத்த பழமைவாதப் போக்கு, அநாகரீகத்தின் ஆழம், போக்கிரித்தனம், மற்றும் துணிச்சல் என்பன மதவெறித்தனம் என்கிற கொந்தளிக்கும் ஒரு எரிமலைக்கு சான்று பகன்றன, மற்றவர்களுக்கு எதிராக வைராக்கியத்தையும் வெறுப்பையும் காண்பிப்பதுதான் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலால் பேணி வளர்க்கப்படுவதும் மேலாதிக்கத்தினால் திணிக்கப்பட்டிருப்பதும் ஆகும்.
பௌத்த மதத்தின் தத்துவங்களையும் நெறிமுறைக் கண்ணோட்டங்களையும் தங்கள் குருத்துவத்தின் நிறுவனக் கட்டளையாக பின்பற்றி வருபவர்கள், கூட்டாக மீறல்கள் புரிந்திருப்பதைப் பற்றியோ அல்லது போக்கிரித்தனமான இந்த மதவெறியினைப்பற்றியோ நான் இங்கு கவலைப்படவில்லை,  ஏனெனில் பௌத்தமதக் கோட்பாடுகளின் தூய நெறிமுறையின் சாரம் ஸ்ரீலங்காவில் இருப்பதாக நான் ஒருபோதும் நம்பியதில்லை.
ஸ்ரீலங்காவில் இருக்கும் பௌத்தம், சிங்கள (ஆரிய) மேலாதிக்க அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் அமையப்பெற்றது, அது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வளர்த்துவிடப்பட்டது, மற்றும் அது ஆதிக்க அந்தஸ்துள்ள வர்க்க நலன்களையும் மற்றும் ஆளும் வகுப்பினரின் முதலாளித்துவ அரசியலுக்கு வேண்டியும் சேவையாற்றுகிறது. பொதுவில் இன்றைய குருத்துவமானது புத்த பெருமான் குறிப்பிட்ட மற்றும் நிரூபித்த பக்தி,துறவு, மற்றும் ஞ}னத்தை தேடல் போன்றவற்றின் சாராம்சங்கள் எதையுமே, நிறுவன ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. அநேகமான பகுதிகளில் அது இருப்பது ஊழல், வர்க்கபேதம், சாதிப்பாகுபாடு, சலுகைகள் என்பனவற்றின் உறைவிடமான காவிஉடை தரித்த செல்வந்த மற்றும் சக்திமிக்க நிலப்பிரபுக்களின் பிடியிலேயே, இதே நிலைதான் ஏனைய மத நிறுவனங்களிலும் உள்ளது.
பௌத்தம் அதன் கோட்பாட்டின் நெறிமுறைகளின் சாரப்படி இருக்குமானால், அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை கருதாமல்  பக்தியை மட்டுமே நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மையான அர்ப்பணிப்பான பௌத்தர்களிடமே அது தங்கி நிற்கும். புத்த பெருமானை தலைசிறந்த தத்துவஞ}னிகளில் ஒருவராக நான் கருதுவதாலும், அவரது பகுத்தறிவு மிக்க பொதுமைத் தத்துவம்,கடினமான விஞ்ஞ}ன ஆய்வு மற்றும் இயங்கியல் முறையோடு ஒருங்கிணைக்கப்பட்ட தர்மா, என்பனவற்றின்மீது ஆழமான மரியாதை மற்றும் விமர்சனம் கலந்த பாராட்டுகளை நான் கொண்டிருப்பதால் இந்த உண்மையை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன், நான் பொதுவுடமைத் தத்துவங்களை ஏற்றுக் கொண்டவனாக இருப்பினும்,அரசியல் அதிகாரம்,சொந்த ஆதாயம் மற்றும் வணிக இலாபம் போன்றவற்றை அடைவதற்காக பௌத்தத்தை பயன்படுத்தி சுரண்டி ஏலம் விடுபவர்களை மற்றவர்களுக்கு சமமாக நானும் தூற்றுகிறேன்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள தாக்கங்களையும் அதன் காரணமாக கிளைத்தெழும் பிரச்சினைகளையும் ஆய்வு செய்வது முக்கியம் என நான் எண்ணுவதால் அவற்றை இந்த கட்டுரையில் துணிந்து புகுத்தியுள்ளேன்.ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதால் அது விசேட முக்கியத்துவத்தை அடைந்துள்ளது.அதேபோல் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளின் செயற்பாடுகளின் விளைவினை சர்வதேசமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அப்போ அரசியலமைப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை பட்டப்பகலில் காவல்துறை மற்றும் சிறப்பு பணிப் படைகளின் பிரசன்னத்துக்கு மத்தியில் எப்படி இத்தனை மோசமான அடிப்படை உரிமைமீறல்கள் நடைபெற்றன, மற்றும் அரசாங்கம் எப்படி இந்த தன்னிச்சையான அவசரமான முடிவை எடுத்தது? இந்தப் பின்னணியில் நாங்கள் மூன்று சாத்தியக்கூறுகளை அனுமானிக்கலாம்,
1.ஒன்றில் ஆட்சியனரே இந்த தாக்குதலை இயக்கியிருக்க வேண்டும்.
2.ஆட்சிக்கு எதிரான சக்திகள், ஆட்சியின் மதிப்பை குறைப்பதற்காக இதனை நடத்தியிருக்கவேண்டும். அல்லது
3.அடிப்படைவாத சக்திகள் தங்கள் சொந்த விருப்பத்தின்படி இதை நடத்தியிருக்க வேண்டும்.
dambullaஆட்சிக்குள்ளேயே இருக்கும் தங்கள் நலன்களில் அக்கறையுள்ள சக்திவாய்ந்த ஒரு பிரிவினர் இந்த தாககுதலை நடத்தியிருப்பதற்கான அல்லது அதற்கு உடந்தையாக இருந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. இதில் தெளிவாக தெரிவது ஆட்சியானது தானும் மற்றும் ஆளும் அரசியல் வாரிசுகள் மூவரைக் கொண்ட கட்சியும் மற்ற எல்லா பரிந்துரைகளுக்கும் மேலாக அதனது அரசியல் உயிர்பிழைத்தலிலேயே நம்பிக்கை வைத்துள்ளது என்று.
இது அதிகாரம் பெருமை என்பனவற்றின் மீதுள்ள  மோகத்தினால் ஏற்படுகிறது,பெரும்பாலும் அது இயக்கப்படுவது ஆட்சியும், வாரிசுகளான மூவரும் அரச அதிகாரத்தின் மீதுள்ள தங்கள் மேலாதிக்கப் பிடியினை இழந்துவிட விரும்பாத காரணத்தால்,இருப்பினும் அது நிச்சயம் மக்கள் தீர்ப்பாயம் முன்பாக இழுபட்டுவிடும் மற்றும் ஒருவேளை சில சர்வதேச தீர்ப்பாயங்களின் முன்பாக நீதியை எதிர்பார்த்து நிற்கவேண்டியும் ஏற்படும்
ஆட்சியாளர் மற்றும் ஆளும் வம்சத்தின்  ஆட்சியின் கருத்தியல் மற்றும் அரசியல் நிகழ்ச்சித் திட்டம் என்பன, சிங்கள பௌத்த ஒற்றை அரசாட்சியின் பிரச்சினையற்ற மேலாதிக்க ஆட்சியை முழுமையாக பிரிக்கப்படாத இறையாண்மையுள்ள பிரதேசமான லங்காவில் நிரந்தரமாக ஏற்படுத்துவதேயாகும். இது தற்பெருமை எனும் முனையத்தில் உள்ள ஒரு பொருளாகும்.
மேற்கத்தைய சதியுடன் இணைந்துள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் நிதியுதவியுடன் புத்துயிர் பெற்றுள்ள எல்.ரீ.ரீ.ஈ குழு தெற்கத்தைய சிங்கள கிளர்ச்சியாளர்களுடன் கூட்டுசேர்ந்து – ஆட்சிக்கு எதிராக காட்டிக் கொடுக்கும் ஒரு சதி முயற்சியை – தாய்நாட்டை காப்பாற்றுவதற்கு சமமான ஒரு முயற்சியாக ஆரம்பித்துள்ளது, இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு புதிய ஒரு சாராம்சத்தை சேர்க்கிறது.
சில சித்தப்பிரமை பிடித்த தூதுவர்களான மேதாவிகளையும், மற்றும் அழிந்துபோன மனித இனங்களைச் சேர்ந்த தேசபக்தர்களையும், எங்களின் அதி உயர்ந்த கூட்டுக்கடமையாக எங்களைப் பாதுகாக்கவும் மற்றும் சேவையாற்றவும் கொண்டிருப்பதுதான், தேசிய இறையாண்மை என்பதன் தற்கால அர்த்தம்.
பெருகிவரும் வெகுஜனத்தின் கோபத்தையும் விரக்தியையும் திசை திருப்புவதற்கு அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரத்தை ஐந்து நட்சத்திர பாராளுமன்ற ஜனநாயகம் என்கிற போர்வையில் பிரயோகிப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு வழி இருக்கிறது.
உறுதியாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகள் ஆடிப்பாடி உணவருந்தவோ, புகழ்ந்து பேசி வசமாக்கவோ அல்லது ஏமாற்றவோ இத்தகைய சாவாதிகாரத்தை பயன்படுத்துகின்றன, இதுவரைகாலமாக அது தன் கடமையை  நிறைவேற்றுவதற்கு இடைஞ்சலாக பொதுமக்கள் மேற்கொள்ளும் தடைகளை நசுக்கி அழிப்பதற்காக ,முதலாளித்துவவாதிகள் அவர்களை கொள்ளையடிக்கும் வகையில் தடையாக இருக்கும் வாதில்களை விரியத் திறந்து விdambulla-mosqueட்டு வந்துள்ளனர்.
இரண்டாவது சாத்தியக்கூறு, ஆட்சியாளர்களுக்கு எதிரான சக்திகள் ஆட்சியாளர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது, சாதாரணமாக சொல்வதானால் இது சுத்த அபத்தம். ஏனெனில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த வரிசையில் ஆட்சியாளர்கள் தாங்களாகவே அத்தகைய சொற்களை பரிமாறிக் கொண்டிருக்கலாம், மற்றும் அதற்கு ஏவல் புரியும் ஊடகங்கள் இதற்கு வக்காலத்து வாங்கியிருக்கலாம். ஏனெனில் இந்த தாக்குதல்களை தூண்டிவிட்டு,அதை தலைமையேற்று நடத்தியவர், தம்புள்ள ரஜமகா விகாரையின் பிரதம குரு, அவர் சக்திவாய்ந்த பௌத்த குருத்துவத்தின் நிலப்பிரபுத்துவ எழுத்தர், ஒற்றையாட்சிமுறையைக்கொண்ட பௌத்த சிங்கள தெய்வ ஆளுகையான முதலாளித்துவ அரசில் அதிகாரத்தையும் புகழையும் அடையவேண்டும் என்கிற சொந்த விருப்பங்களைக் கொண்டவர். அவருடைய வர்க்க நலன்கள் ஆட்சியாளர்களுடையதுக்கு சமமானது.
மூன்றாவதாக, இந்த தாக்குதல்கள் அடிப்படைவாத சக்திகளால் அவர்களின் சொந்த முயற்சியினால் சுயாதீனமாக தூண்டப்பட்டிருக்கலாம் என்பது, இதை புறக்கணித்துவிட முடியாது. அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானமான ‘நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மற்றும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான இதர கடப்பாடுகளையும் நடைமுறைப்படுத்துதல்’ என்பதனை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அடிப்படைவாதிகளின் திட்டத்துக்கு சாவுமணி அடிப்பதைப் போன்றது. இந்த பரிந்துரைகள்,பயனுள்ள அரசியலமைப்பு மூலம்,தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்கம் செய்யும் அரசியல் தீர்வு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கிறது.
அதன் கருத்து தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்தை ஒரு தேசிய இனத்தவர்களாக அல்லது அத்தகைய இணைப்பை அடிப்படையாக கொண்டு அமையத்தக்க முறையில் உண்மையாகவும்  சட்டப்படியும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே. உயர்ந்த சிங்கள – பௌத்தர்களைத் தவிர வேறு தேசம் அல்லது தேசிய இனத்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த தீவில் வாழ்வது இந்த அடிப்படைவாதிகளுக்கு உக்கிரமான வெறுப்பூட்டும் யோசனையாகவே இருக்கும். அதிக பட்சம் அங்கு சிங்களவர்கள் கருணைகூர்ந்து சகித்துக் கொள்ளும் சிறுபான்மையினத்தவர் மட்டுமே வாழலாம்.
அதேநேரம் இந்தியா அதன் உள்நாட்டு மற்றும் விரிவாக்க காரணங்களுக்காக அப்படியான ஒரு தீர்வினை (13 பிளஸ்) வழங்கும்படி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பெருகிவரும் அழுத்தம் காரணமாக மகிந்த ராஜபக்ஸ இந்த விடயம்பற்றி மழுப்பி பேசுவதும் மற்றும் அதிலிருந்து நழுவுவதாகவுமே காணப்படுகிறார். நான் கருதுவது வெளிவிவகார அமைச்சரை, மனித உரிமைகள் தொடர்பாக ஒரு இரகசிய செயற்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ராஜாங்க செயலாளரை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்புவது, பழமைவாத அடிப்படைவாதிகளின்  முகாம்களிலுள்ளோரின் முதுகெலும்புக்கு கீழே நடுக்கத்தை அனுப்பியிருக்கும்.
இந்த சதிவேலைகள் காரணமாக ஜனாதிபதியின்மேலும் ஆட்சியின்மேலும் உள்ள தங்களின் பிடி தளருவதாக அவர்கள் எண்ணியிருக்கலாம் அதன் காரணமாக தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, பள்ளிவாசல் மீதான தாக்குதல் போன்ற கடுமையான நாடகத்தன்மையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். ஜனாதிபதி மற்றும் ஆட்சி என்பன சதுரங்கப் பலகையில் தாங்கள் கணிப்புடன் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளியிடாதது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கும்,கடும் வெறியர்களான இந்த அடிப்படைவாதிகளின் முகாம்களுக்கு எதிராக பகிரங்கமாக மோதல் நடத்தியிருந்தால் குறைந்தது அனைத்து சித்தாந்த சட்டங்கள் மற்றும் சிங்கள உயர் தலைமையினால் பெறப்பட்ட அரசியல் அதிகாரங்கள் மற்றும் தாய்நாட்டின் காவலர்கள் என்கிற பெயர் ஆகியன சவால்களுக்கு ஆளாகி விதியின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கும்.
மற்றொன்றில் வெளியிடப்பட்டிருந்த எனது முந்தைய கட்டுரையில் நிறுவனத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அரசியல் கருத்தியல்வாதிகள் மற்றும் சமூக அடிப்டையிலான வெறித்தனமான பாசிசவாதிகளைக் கொண்ட பெருந்தீனி உண்ணும் வொல்வரின் முகாம்களைப் பற்றியும் குறைத்து மதிப்பிடுவது ஆபத்து என்று எச்சரித்திருந்தேன்.
அவர்கள் சக்திவாய்ந்த அமைச்சுப்பதவிகளை வகிக்கிறார்கள், மற்றும் ஆயுதப்படைக்குள்ளும், அதிகாரவர்க்கத்தினர்களுக்கும் இடையில் ஊடுருவியிருக்கிறார்கள், அதிகாரத்தை மொத்த விற்பனை செய்யும் சதிமுயற்சிக்கான சாத்தியக்கூறு உள்ளதாகவும் மற்றும் மொத்த ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக முன்னேறவேண்டிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக எத்தகைய பிரச்சாரத்தையும்  சதிமுயற்சியையும் மேற்கொள்ளத் தக்க ஆபத்து இருப்பதாக, சிவப்பு விளக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
ஒருவேளை இதனால்தான் சமய விவகார அமைச்சர், ஜனநாயக,அரசியலமைப்பு,மற்றும் ஒப்புதலுள்ள செயல்முறைக்கு மதிப்பளிக்காமல், பள்ளிவாசல் மற்றும் கோவில்களை உடனடியாக இடித்து தள்ளுமாறு அவசரமாக ஆணையிட்டுள்ளார், மற்றும் ஏன் பிரதான நிறைவேற்றுனர் இந்த விடயத்தில் இதுவரை மௌனம் சாதித்து வருகிறார்?
முன்பொருமுறை பிந்துனுவௌ எனுமிடத்தில் நடந்த ஒரு தாக்குதலில், ஆயுதப்படைகளின் கண்முன்னால், பட்டப்பகலில் 28 தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுக்கு தமிழர்களின் கோரிக்கையை ஏற்று சிங்கள பௌத்த அரசின் ஏகாதிபத்திய அந்தஸ்துள்ள ஒற்றையாட்சியை குலைக்கும் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் வரப்போகும் கடின ஆபத்தைப்பற்றி எச்சரிக்கை செய்யவே இக் கொலைச்சம்பவம் வடிவமைக்கப்பட்டது.
Mosqueஇந்த கொலையில் சம்பந்தப்பட்ட நிஜக் குற்றவாளிகள் இன்னமும் வெளியே உலாவிக் கொண்டு, புதுப்பிக்கப்பட்ட பலத்தோடு இன்னும் அதிக வசதியான நிலையில் மேலதிக நேர வேலைகளை செய்தவண்ணம் உள்ளனர். மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசல்மீது  மேற்கொண்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட தாக்கங்களும் அதனால் கிளைவிட்ட பிரச்சினைகளும் அடித்தளம் வரைக்கும் ஓடி தனியான பிரிவினைகள், அராஜகம், மற்றும் வன்முறை என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊனுண்ணிகள் தங்கள் விஷப் பற்களை நாட்டினதும் மற்றும் மக்களினதும் இரத்தக்குழாய்களில் பதிக்கத் தொடங்கியுள்ளதற்கான எச்சரிக்கையை எதிரொலித்துள்ளது.ஆசியாவின் அதிசயம் மற்றும் சொர்க்கத்துக்கு அமைதிக்கான வாக்குறுதி ரொம்பவே அதிகம்.
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் மரபுவழியாக வந்த தேசப்பற்று மற்று தாய்நாட்டுப்பற்று என்பனவற்றை பாதுகாத்து என்னவிலை கொடுத்தாவது நிலைத்திருக்க செய்யவேண்டியுள்ளது. இந்த அவமானம் ஏற்படுத்துகிற மற்றும் இரத்தம் தோய்ந்த மரபுவழியின் கீழ், நாடு முன்னொருபோதும் இல்லாதவாறு ஏகாதிபத்தியம் மற்றும் பிராந்திய வேட்டையாடும் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் அகப்பட்டுள்ளது.
லங்கா பூமி தூய்மையான தேரவாத பௌத்த மரபின் களஞ்சியமாக விளங்கியதாக கூறப்படுகிறது, அது வெளிநாட்டு சக்திகளிடம் நிரந்தரமாக அடைவு வைக்கப்பட்டு விட்டது, அங்கு கொள்ளைக்கூட்டத்தாரும், போதைமருந்து முதலாளிகளும், கொலைகாரர்கள்,சித்திரவதை புரிவோர், கூட்டிக்கொடுப்போர், மற்றும் மேல்தட்டு விபசாரிகள், ஆகியோர் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள்.
அங்கு உயர்ந்து நிற்கும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு, ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள்,ஜொலிக்கும் கசினோக்கள், விபச்சார விடுதிகள், மதுபானச்சாலைகள், அதியுயர் வேகச்சாலைகள், இயற்கை காட்சிகள் என்பன உள்ளன,அதேவேளை அதிகளவான மக்கள் அழுகிய சூழலில் ,எதிர்காலத்தினைப்பற்றிய நம்பிக்கையில்லாமல், அடிப்பகுதியற்ற வறுமை, கடன்,மற்றும் பாதுகாப்பின்மை என்பனவற்றில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அங்கு அவர்களுக்கான  பொதுக் கல்வி, மற்றும் சுகாதாரம் போன்ற அவசியமான சமூகக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அங்கு தமிழ் மக்கள் நேரடி இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தாய்நாட்டிலே அரசியல் கொத்தடிமை தனத்துக்கு இலக்காகியுள்ளார்கள், பிரிவினை, திவால்,மற்றும் பிச்சைக்கார தேசத்தில் முழு நிலம், மற்றும் மக்கள் உக்கிரமான இராணுவமயமான மற்றும் அரசியல்மயமான நடவடிக்கைகளுக்கு இலக்காகியுள்ளனர், அங்கு அரசியல் ஆட்கடத்தல்கள், காணமற்போதல்கள், கொலைகள், மற்றும் சித்திரவதை ஆட்சியின், ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன நீண்ட காலமாக இரக்கமற்ற ஊழல்நிறைந்த பயங்கரவாத முதலாளித்துவ சர்வாதிகாரத்தினால் ஆழப் புதைக்கப்பட்டு விட்டது, அங்கு ஆதிகாலத்திலேயே நாகரிகமடைந்த மக்களாகிய எங்கள் கௌரவம் மற்றும் மரியாதை என்பனவுக்கு மாசு ஏற்படுத்தி மீறல்களை ஏற்படுத்தியுள்ளதுடன் நாங்கள் ஒரு காட்டுமிராண்டி மக்களைப்போலப் பார்க்கப்படுகிறோம்.
இந்த துரதிருஸ்டமான நேரத்தில் பிறந்த மற்றும் பிறக்கப்போகும் தலைமுறைகள், வரம்புகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு அமையவுள்ள அமைப்பு மற்றும் ஆட்சியை பார்க்க நமக்கு அழைப்புவிடுக்கின்றன.
ஏகாதிபத்தியம் மற்றும் புதிய காலனித்துவ அடிமைத்தனம் என்பனவற்றின் இடிபாடுகள் மற்றும் சாம்பலின் மீது ஏறி நின்று,அடிவானத்தில் உயரும் புதிய உலகத்தின் பிரகாசமான விடியலை அனுபவிப்பதில் எங்கள் பார்வையை உயர்த்தும்படி எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்காலத்தில் பிரிக்கமுடியாத மற்றும் வெல்ல முடியாத ஸ்ரீலங்கா மக்கள் என்று கூறுவதற்கும் மற்றும் எங்கள் விதியினை தீர்மானிப்பதற்கு வேண்டியும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து நின்று போராட வேண்டும்.
(கட்டுரை எழுத்தாளர் இலங்கை கம்மியுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) செயலாளர்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Source:http://www.thenee.com/html/28042-2.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator