Thursday, April 26, 2012

சிறந்த பெறுபேறுபெற்ற முதல் 56 பாடசாலைகளுள் கொழும்பு இந்துமகளிர், வேம்படி, யாழ். இந்து, ஹாட்லி

ந.ஜெயகாந்தன்

2011 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படியில் கொழும்பு தேவி பாலிகா கல்லூரி, கம்பஹா ரத்னாவெலி மகளிர் கல்லூரி மற்றும் மாத்தளை விஞ்ஞான கல்லூரி ஆகிய மூன்றும் உயர் அடைவுமட்டங்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளன.இதேவேளை, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகியன உயர் அடைவு மட்டங்களை பெற்ற முதல் 56 பாடசாலைகளுக்குள் உள்ளடங்குகின்றன.

அத்துடன், வடமாகாணத்தில் வட்டுக்கோட்டை அராலி வள்ளியம்மா ஞாபகார்த்த வித்தியாலயம், கிழக்கு மாகாணத்தில் தம்மனாவளை லிகினியாகம, மகா வித்தியாலயம் மற்றும் தென் மாகாணத்தில் வெளிகெட்ட பல்லேமல்லை கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன சாதாரண தரப் பரீட்சையில் ஆகக் குறைந்த அடைவு மட்டங்களை பெற்றுள்ளன.
அத்தோடு குறைந்தளவான அடைவு மடங்குகளை பெற்றுக் கொண்டுள்ள 42 பாடசாலைகளுல், தமிழ் வித்தியாலயம், கலஹா திருவல்நுவர தமிழ் வித்தியாலயம், காரைநகர் சுந்தர மூர்த்தி வித்தியாலயம், தொலஸ்பாகே தமிழ் வித்தியாலயம், ஹாலிஎல நாரன்ஹெல தமிழ் வித்தியாலயம், கிழக்கு மாகாணம் திருவள்ளுவர் வித்தியாலயம், மட்டக்களப்பு நாவக்கல் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் உள்ளடங்குகின்றன.
இதேவேளை உயர் அடைவு மட்டங்களை பெற்றுக் கொண்டுள்ள 56 பாடசாலைகளுல் 43 தேசிய பாடசாலைகளெனவும் மிகுதி 13 பாடசாலைகளும் மாகாண சபைகளுக்குறியதெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறைந்த அடைவு மட்டங்களை பெற்றுள்ள 42 பாடசாலைகளுல் அதிகமானவை மத்திய மாகாணத்திலேயே காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13641----56-------.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator