கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு
வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் துணைச் செயலாளர்
நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவமிக்க தேர்தலாக அமையவுள்ளது. தமிழரின் அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக இத்தேர்தலில் போட்டியிடப் போகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஜெனிவா மாநாட்டுக்குப் பின்னர் அமையப் போகின்ற இம்மாகாண சபைக்குக் காணி மற்றும் காவற்துறை உட்பட பெரும் அதிகாரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் இத்தகைய உயர் அதிகாரங்கள் பொருந்திய மாகாணசபையை இந்த கிழக்கு மண்ணில் பிறந்த ஒரு முஸ்லிம் மகன் ஆள்வதன் மூலமே எமது பிராந்தியத்தைக் கட்டி யெழுப்பவும், மக்கள் நலன்களை நிறைவேற்றவும் முடியும்.
சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதே தவிர மத்திய அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிப்பது உருவாக்கப்பட்ட ஒருகட்சியால்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment