Wednesday, April 11, 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பல்கலை கழக கல்வி செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்.



news யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட கலைப்பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் ஐந்துபேர், கல்வி செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட தில்லைநாதன் தனராஜ் என்ற முதலாம் வருட கலைப்பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,இம்மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. 
 
மேலும், சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்  ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்ட இந்நிலையில் மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்கள் மூவரை  பல்கலைக்கழக நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 
சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின் காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள்  ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=37567970211114098

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator