மன்னார் நிருபர்
மன்னார் நகரில் இறைச்சிக்கடைக் காரர்களுக்கு மாடுகளை விற்ற பெரும் பாலானோருக்கு அந்த இறைச்சிக் கடைக்காரர்கள் பல இலட்சம் ரூபா பாக்கியை வழங்காது ஏமாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகரிலும் ஏனைய புற நகரப் பகுதிகளிலும் பத்திற்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் இயங்கிவரும் நிலையில் இந்தக் கடைகளின் இறைச்சித் தேவைக்கான மாடுகள் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாந்தை மேற்கு, மடு, கிளிநொச்சி, கரைச்சி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களில் வதியும் கால்நடை வளர்ப்போர்களிடமும், விவசாயிகளிடமுமே கொள்வனவு செய்யப்படுவது வழமை.
இந்த நிலையில் இந்தப் பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்போர்களில் பலர் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கடன் அடிப்படையில் மாடுகளை வழங்கியபோதும் அதற்கான பணத்தைச் செலுத்தாது அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இரண்டொரு தடவைகள் உடன் பணத்தினைச் செலுத்தி மாடுகளை மன்னார் வியாபாரிகள் வாங்கிச் செல்லும் நிலையில் அவர்கள் மீதான பாரிய நம்பிக்கை காரணமாக அடுத்த தடவை பணத்தைப் பெறாது மாடுகளை இறைச்சிக்கடை வியாபாரிகளுக்கு கால் நடை வளர்ப்போரும், விவசாயிகளும் வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
எனினும் இந்த வியாபாரிகள் பின்னர் அந்தப் பகுதிகளுக்கு செல்லவே இல்லை எனவும் கூறப்படுகிறது.
வன்னிப் பகுதியில் யுத்தத்தில் சகல உடைமைகளையும் இழந்த நிலையில் தமது கால்நடைகள் மட்டுமே மிகுதியாக இருந்ததினால் இதன் மூலம் ஜீவனோபாயத்தை மேற்கொண்டவர்களுக்குரிய பல இலட்சம் ரூபா பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மை ஏமாற்றியவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் நகருக்கு தேடிவரும் சந்தர்ப்பத்தில் அவர்களை புலிகளெனக் கூறி மிரட்டுவதுடன் பணத்தை கொடுக்காது அவர்களை அலைக்கழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நகரில் பல இடங்களில் இறைச்சிக் கடைகள் இயங்கிவரும் நிலையில் சில வியாபாரிகள் இவ்விதம் மோசடிகளில் ஈடுபடுவதினால் நேர்மையான வியாபாரிகளும் கஷ்டங்களை எதிர்நோக்குவதுடன் அவர்களின் இறைச்சித் தேவைகளுக்கான மாடுகளை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13723-2012-04-28-15-54-13.html

No comments:
Post a Comment