மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் மகன் சில டெலிகம் நிறுவனங்களுக்கு ஆதரவாக
செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.ஜ., உள்ளிட்ட
எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன . இதனால் அவை
நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது மத்திய நிதி துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். இந்நேரத்தில் இந்த பதவியை பயன்படுத்தி இவரது மகன் கார்த்தி சிதம்பரம் சில ஆதாயங்களை பெற்று கொடுத்ததாகவும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கார்த்தி பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் அன்னிய முதலீட்டு தொகை கிளியரன்ஸ் கொடுக்க நிதி அமைச்சகம் உதவி செய்தது என்றும் கூறியிருந்தார்.
ஏர்செல் - மாக்ஸிஸ் நிறுவனம் கைமாறப்பட்டபோது கார்த்திக் லாபம் பெற்றார். எனவே இவரையும் விசாரிக்க வேண் டும் என்றும் கோரி வருகிறார். இந்த விவகாரத்தை எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கிளப்பி சிதம்பரம் பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனையடுத்து லோக்சபா 2 முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த அமளி நிலவியபோது அமைச்சர் சிதம்பரம் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சாமியின் புகார் தவறானது என்றும், இது தொடர்பாக இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கார்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil

No comments:
Post a Comment