சவூதி அரேபியாவில் ரியாத்தில் வசித்து வரும் இலங்கை ஆண் ஒருவர் தனது
மொராக்கோ நாட்டு மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகியதால் நினைவாற்றலை
இழந்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ரியாத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் 54 வயதுடைய பியல்
ரத்னபால என்ற இலங்கையர் 29 வயதுடைய சயிம் என்ற மொராக்கோ நாட்டு பெண்ணைத்
திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக ரியாத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ரத்னபால தனது மொராக்கோ நாட்டு மனைவியிடம் சமயலறை கத்தியால் பல தடவைகள் குத்து வாங்கி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் மனைவி மேற்கொண்ட கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ரத்னபால வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில் நினைவாற்றலை இழந்துள்ளதாகவும் தற்போது ரியாத் இலங்கை தூதரக பாதுகாப்பில் உள்ளதாகவும் சில விடயங்களை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துள்ள ரத்னபால கேள்விகள் கேட்டால் அதற்குப் பதில் கூற பல விடயங்களை மறந்துவிடுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் கைது செய்து ரியாத் பொலிஸார் விசாரித்தபோது தாக்குதல் நடத்தப்பட்டமையை உறுதி செய்த அப்பெண், தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாதென கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவி தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது எனவும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரத்னபால குறிப்பிடுவதாக ரியாத் இலங்கைத் தூதரக அதிகாரி அநுர முத்துமால தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறுவதுபடி சட்டம் செயற்படாதென முத்துமால தெரிவித்துள்ளார்.
விவாகரத்து செய்யவேண்டுமானால் தனக்கு 100,000 சவூதி ரியால் நட்டஈடாக வழங்கவேண்டும் என மொராக்கோ மனைவியுடன் ரத்னபால ஒப்பந்தம் ஒன்று செய்துகொண்டுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source:http://www.thinakkural.com/news/all-news/local/12837-2012-04-15-19-25-12.html

No comments:
Post a Comment