
சீரற்ற
காலநிலையால் தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களின்
எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலை 8 மணியுடன்
நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தெற்கு அதிவேக வீதியில் 8 வாகன
விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண
தெரிவித்துள்ளார்.மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பணி மூட்டம் காணப்படும்
சந்தர்ப்பங்களில் அதிவேக வீதியைப் பயன்படுத்தும் போது வேகத்தைக்
கட்டுப்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
அதிவேக வீதியில் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர்
வேகத்தில் பயணிக்க முடியுமாயினும் சீரற்ற காலநிலையால் குறைந்த வேகத்தில்
வாகனங்களை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தெற்கு அதிவேக வீதி
திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் 180 விபத்துக்கள்
பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12844-----8-.html
No comments:
Post a Comment