Sunday, April 15, 2012

வடக்கில் பாதிப்புற்ற மக்களை எம்.எஸ்.எப். கைவிடவில்லை



news
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் சேவையை கைவிடவில்லை என எம்.எஸ்.எப். என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள நல ஆலோசனையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.எஸ்.எப் தொண்டு நிறுவனம், கடந்த 5 ஆம் திகதி வடக்குக்கான தனது சேவையை இடைநிறுத்திக் கொண்டது.


எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படவில்லை எனவும், நீண்ட கால அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும் எம்.எஸ்.எப். தெரிவித்துள்ளது.

எனவே நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்களை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு கிடையாது என எம்.எஸ்.எப். அறிவித்துள்ளது.
இதன் காரணமாகவே இதுவரை காலமும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவந்த உளநல ஆலோசனைச் சேவையை இடைநிறுத்தியதாகவும், இது போரில் பாதிக்கப்பட்ட மக்களை கைவிடுவதாக அர்த்தப்படாது எனவும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

போர் முடிவடைந்த மூன்றாண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உளம்சார் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதனை மறுப்பதற்கில்லை என எம்.எஸ்.எப். குறிப்பிட்டுள்ளது.

அவசரமாக உதவி தேவைப்படும் மற்றுமொரு பிரதேசத்துக்கு தமது வழங்களை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=30351979316398627

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator