பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் போலியாக கௌரவப் பட்டங்களை வழங்குவதை தடுக்கவும் அவ்வாறு கௌரவப்பட்டங்களை பெற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தேசமான்ய தேசபந்து மற்றும் டாக்டர் பட்டங்கள் உட்பட பல்வேறு கௌரவப் பட்டங்களை பெற்றவர்களின் பெயர் விபரங்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படவுள்ளது.
பெருமளவான பணத்தை பெற்றுக் கொண்டு சமூகத்தில் எதுவிதமான தகுதியும் இல்லாதவர்கள் மற்றும் சமூக சேவைகள் மேற்கொள்ளாதவர்களுக்கும் சில குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் பெருமளவில் பணத்தை பெற்றுக் கொண்டு கௌரவப் பட்டங்கள் வழங்கப்படுவதாக அரசாங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனால் கௌரவ பட்டங்களின் உயர் உன்னதத் தன்மை பாதிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறு கௌரவப் பட்டங்கள் வழங்கப்படுவது தொடர்பில் விரைவில் சட்ட மூலங்களை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37617
No comments:
Post a Comment