Monday, April 16, 2012

தொழில் வாய்ப்பு, சமூக வவூட்டல், நிலையான அபிவிருத்தி – பெரெண்டினாவினால் நடைமுறைபடுத்தப்படும் மாற்றங்கள் _

60,000 நுண் நிதி கடன் திட்டங்கள். 18,000 பேருக்கு தொழில்சார் பயிற்சிகள் 10,000 பேருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு வசதிகள் 6,000 பேருக்கு தொழில் பயிற்சிகளுக்கான புலமை பரிசில்கள்.

முழுமையான சமூக அபிவிருத்திக்கு தேவையான நிதியுதவி திறமை அபிவிருத்தி தொடர்பு வலையமைப்பு, வாழ்வாதாரம் உயர்ச்சி, வாழ்க்கைச் சக்கர அபிவிருத்தி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியனவற்றின் ஒருங்கிணைவு பொதுவான நிலையான அபிவிருத்தியின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. இவை தனிநபரையும், சமூகங்களையும் வலுப்படுத்த உதவியாக உள்ளன. மேலும் கிராமிய சமூகங்களை பொருளாதார
அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான நீடித்த பங்களிப்புகளை செய்கின்றன. இதன்மூலம் தேசிய பொருளாதாரம், வளர்ச்சி அடைகிறது. கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத நீடித்த அபிவிருத்தியின் பண்புகளை உருவாக்கி பலமான பொருளாதார அடித்தளத்தை ஸ்தாபிப்பதே பெரெண்டினாவின் அதீத பின்னணியாகும் என்று பெரெண்டினா ஸ்டிச்டிங் நிறுவனத்தின் தலைவர் எய்ன் பிரின்சன் தெரிவித்தார். பெரெண்டினாவின் 25ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் அண்மையில் இடம்பெற்ற பொழுது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பெரெண்டினாவின் அர்ப்பணிப்பு, சக்தி, கருத்தாக்கம் மற்றும் ஆரோக்கிய மாற்றங்கள் குறித்து அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நெதர்லாந்து தூதுவர் மாண்புமிகு L.W.M.Piet கருத்துக்களை வெளியிட்டார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் இலங்கையில் முக்கியமான செயலாக கருதப்படுகின்றமையால், நாட்டில் சாதகமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எம்மை போன்று தூதுவர்களும் செயலாற்ற பணிக்கப்பட்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ளன. 2010ஆம் ஆண்டில் இ;ருந்து இன்று வரை நெதர்லாந்து முதலீடுகள் இலங்கையில் 30 வீதத்தால் அதிகரித்துள்ளன. உற்பத்தி, பதப்படுத்தல், சுகாதாரம், மீன் பிடி மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி தொடர்பான விடயங்களில் நெதர்லாந்து கூடுதலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பெரெண்டினா போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு இதனை மேலும் பல மடங்காக அதிகரிப்பதற்கு உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டார். இத்தகைய முயற்சிகளின் இறுதி இலக்கு தேசிய அபிவிருத்தியாகும்.

பெரெண்டினா யடியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கராகொட எனும் கிராமத்திலேயே தனது ஆரம்பக் கட்ட பணிகளை ஆரம்பித்து. இந்த நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தவாகிய பெரெண்டினா போஸ்டும் அவரது நண்பரான ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ஈவா முதலிகேயும் இணைந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள் தோட்ட மற்று கிராமிய குடும்பங்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை வழங்கினர். 25 வருடங்களுக்கு பின்னர் இந்த முயற்சிகள் அந்த பகுதி மக்களுக்கு பல மடங்கு நன்மைகளை வழங்கியுள்ளது. எந்த செயலையும் சற்று வித்தியாசமாக செய்வதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் 25 வருட காலத்தில் பல மைல் கல்களை எட்டியதாக திரு.பிரின்சன் தெரிவித்தார். இன்று சுமார் ஓரு பில்லியன் ரூபா முதலீட்டுடன் ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 அலுவலகங்கள் செயலாற்றுகின்றன. பெரெண்டினா நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற இரண்டு முகவர் நிறுவனங்களான பெரெண்டினாஅபிவிருத்தி சேவைஇ பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் இதுவரை 60,000க்கு மேற்பட்ட சிறிய கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தக முகாமைத்துவ துறையில் சுமார் 18,000 கடன் பெறுநர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. மேலும் 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதேவேளை சுமார் ஆறாயிரம் பேருக்கு தொழில்சார் பயிற்சிகளுக்காக புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெரெண்டினாவின் அணுகுமுறையில் நீண்ட காலத்தில் வறுமையை ஒழித்தல் ஆகும். அந்த வகையில் வறுமையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் சுகாதாரத்துறை, வீடமைப்பு மற்றும் கல்வி உட்பட மேலும் சில முக்கிய துறைகளில் உள்ள வறுமையை இல்லாதொழிக்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பெரெண்டினா இலங்கை கிளையின் தவைவர் துலான் டி சில்வா தெரிவித்தார். நாளாந்தம் வருமானம் பெறும் வறுமை கோட்டின் கீழ் உள்ள சிற்றூழியர்களுக்கு பெரெண்டினா இரண்டு முகவர் நிலையங்களுக்கு ஊடாக பல உதவிகளை வழங்கியுள்ளது விஷேட தேவைக்கு உட்பட்டோர், முதுமை உட்பட பல்வேறு குறைபாடுகள் உள்ள மக்களுக்கும் வருமானம் இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பெரெண்டினா நிறுவனம் பல உதவிகளை வழங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் மிகவும் வறுமையான நிலையில் உள்ளவர்களுக்கு நுண் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. தோட்டத்துறையிலும் கிராமங்களிலும் உள்ள 16,000 க்கும் அதிகமான குடும்பங்கள் இப்போது சுத்தமான குடிநீரையும் சிறந்த மலசலகூட வசதிகைளையும் பெற்றுள்ளனர். இவர்களுக்காக 1700க்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன. மிகவும் வறுமை நிலையில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு 500 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன. கண்பார்வை குறைந்த 1,107 பேருக்கு கண் சத்திர சிகிச்சை, சத்திர சிகிச்சை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல நிவாரண உதவிகளை பெரெண்டினா வழங்கியுள்ளது. இரத்தினபுரி, மிகிந்தலை போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80க்கும் அதிகமான வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன.

பெரெண்டினா நிறுவனத்தினால் பின்பற்றப்படும் ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சமூக பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கும் பல நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இலங்கையின் சேமிப்பு வங்கி, EITMOS STROMME Microfinance (ஆசியா),கூட்டுறவு சங்கங்கள், சர்வதேச உதவியாளர்கள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளுக்கும் நுண்நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில்சார் பயிற்சி நிலையங்கள், வாழ்க்கை தொழில் செயல் அமர்வுகள், விவசாய கால்நடை, மீன்பிடி, தையல் உட்பட பல்துறைசார் தொழில் சந்தைகள் ஒழுங்கு செய்யப்பட்டன. மேலும் நீர்ப்பாசன வசதிகள், குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளும் அனைத்து சமூகத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் புனரமைக்கப்பட்டன.

இது விடயங்கள் தொடர்பான கூட்டு கலந்துரையாடல் CEPA நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பிரயாந்தி பெர்ணான்டோவின் தலைமையில் இடம்பெற்றது. இதில் வெரிட் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிசான் டி மெல், பிராங்பேர்ட் நிதி மற்றும் முகாமைத்துவ கல்லூரியின் ஆசிய பிராந்திய முகாமையாளர் சாலிய ரணசிங்க ஆகியோர் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரததிற்கான தனியார்துறை பங்களிப்புத் தொடர்பான விளக்க உரைகளை வழங்கினர். தனியார் துறையினர் வெறுமனே லாபத்தை மட்டும் அதிகரிக்கும் நோக்கத்தில் நின்று விடாமல் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று திரு.டி மெல் வலியுறுத்தினார். இன்று தனியார் துறையே வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்காளியாக அமைந்துள்ளதனால், இந்த விடயங்களில் எந்தளவுக்கு கூடுதலான பங்களிப்பை வழங்க முடியுமோ அந்தளவுக்கு வழங்க வேண்டுமென்று திரு.டி மெல் வேண்டுகோள் விடுத்தார்.

ஆரம்ப கால நோக்கத்தை நிறைவேற்றும் பயணத்தில் கணிசமான அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கும் நாம் தொடர்ந்தும் இந்த செயல்பாடுகளை முன்னெடுப்போம் என்று இலங்கையின் முன்னாள் தூதுவர் பிரின்சன் தெரிவித்தார். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டி நீண்டகாலத்தில் வறுமையை முற்றாக ஒழித்து நீடித்த அபிவிருத்தியை பேணுவதே நிறுவனத்தின் நோக்கமென்றும் திரு. பிரின்சன் குறிப்பிட்டார். அதேவேளை புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒரம் கட்டப்பட்ட நபர்களின் திறமை மற்றும் அறிவு ஆகியனவற்றுக்கு ஊக்கம் கொடுத்து சுய மரியாதை பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொழிலையும் புரிவதற்கான வலுவான சுற்றுச்சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு நோக்கமாகும்
Source: http://www.virakesari.lk/biz/head_view.asp?key_c=246

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator