நடிகர் ஷாருக்கான்
அமெரிக்காவில் உள்ள யாழ் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக விமானத்தில்
புறப்பட்டுச் சென்றார். அந்த பல்கலைக்கழகத்தில் அம்பானியின் மகள் படித்து
வருகிறார். எனவே பல்கலைக்கழக விழாவில் சிறப்புரையாற்ற ஷாருக்கானை அழைத்து
இருந்தனர்.
ஷாருக்கானும் நீதா அம்பானியும் தனியார் விமானத்தில் நியூயார்க் விமான நிலையம் வந்து இறங்கினர். விமானத்தில் வந்த அனைவரையும் விமான நிலைய நடைமுறை சோதனைகளை அவசரமாக முடித்து அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.
ஆனால்
ஷாருக்கானை வெளியே அனுப்பாமல் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அவரிடம்
உங்கள் பெயர் என்ன எதற்காக வந்தீர்கள் என்றெல்லாம் சரமாரியாக கேள்விகள்
கேட்டனர். 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
ஷாருக்கானை தடுத்து நிறுத்திய தகவல் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி அவரை விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் பல்கலைக்கழக விழாவுக்கு 2 மணி நேரம் தாமதமாக சென்று ஷாருக்கான் உரையாற்றினார்.
ஏற்கனவே 2009ல் இது போல் அமெரிக்கா விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டார். இது இரண்டாவது முறையாகும். இந்த சம்பவத்துக்காக அமெரிக்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
இந்த் சம்பவத்திற்கு அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறும் போது விசாரணை நடத்த வேண்டும் எனறு அமெரிக்காவிடம் ஒரு கொளகை உள்ளது. இது போல் சம்பவம் இனி நடைபெறாது. என்று அவர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.என்று கூறினார்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74027
No comments:
Post a Comment