Wednesday, April 25, 2012

ஆதிவாசிகளின் விளையாட்டுப் போட்டிகள்...


(எம்.எப்.எம்.தாஹிர்)

ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா முதன் முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ரதுகல வன பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள் அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர்.


அங்கு இடம்பெற்ற விளையாட்டு ஒன்றில் பிரதி கல்வி அமைச்சர் ரதுகல ஆதிவாசி தலைவர்கள் மரமேறும் போட்டியொன்றிலும் பங்குகொண்டமை விசேட அம்சமாகும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. படம் இணைத்துள்ளேன்.





Source: http://www.tamilmirror.lk/--main/39933-2012-04-25-11-03-14.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator