Tuesday, April 24, 2012

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என சிறிலங்கா மத்திய வங்கி முடிவு செய்துள்ளதால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.



இதனால், நேற்று மாலை, 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள சிறிலங்கா நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.

ஏற்கனவே, கடந்த மார்ச் 19ம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா நாணய மதிப்பு 131.60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன்பின்னர், சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்ட போதும், கடந்த இருவாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டுவருகிறது.
http://www.puthinapp...?20120424106063

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator