Wednesday, April 18, 2012

அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட "வேர்ஜின்' விமானம் _

  பிரித்தானிய கட்விக் விமான நிலையத்தில் திங்கட்கிழமை விமானமொன்று விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்து அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டதையடுத்து அந்த விமான நிலையத்திலான விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

மேற்கு சஸகஸ் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ஒர்லான்டோவை நோக்கிச் சென்ற 'ஏ 330' வேர்ஜின் விமான சேவையின் விமானமே அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்தே அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.



தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து 299 பயணிகளும் 13 விமான ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பயணிகளில் 15 பேர் காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தில் புகை வெளிப்பட்டதும் விமானம் மிக விரைவாக இறக்கப்பட்டு அனைத்துக் கதவுகளும் உடனடியாக திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானத்தை சடுதியாக தரையிறக்கும் போது விமானம் பலமாக குலுங்கியதாலேயே பயணிகள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் புகை ஏற்பட்டமைக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37649

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator