Thursday, April 26, 2012

மரியாதையாக பாஸ் போட்டு விடு! ஆசிரியர்களை உள்ளே வைத்துப் பூட்டி மாணவர்கள் போராட்டம்!

மேற்குவங்கத்தில் உள்ள பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கோபிவல்லபபுரம் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பில் 90 மாண்வர்களை 'ஃபெயில்' செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் வைத்து பூட்டி வைத்தனர்.

நயபாசன் ஜனகல்யாண் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


12ஆம் வகுப்புக்கு தங்களை பாஸ் செய்யும் வரை கதவுகளைத் திறக்க மாட்டோம் என்று மாணவர்கள் தரப்பு பிடிவாதம் பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்குவங்க மேனிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 11ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 247 மாண்வர்களில் 90 பேர் ஃபெயில் ஆயினர். இவர்கள் 12ஆம் வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி நிர்வாகிகள் இது குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறியுள்ளது. கவுன்சிலின் முடிவை மாற்ற தங்களுக்கு அதிகாரம் இல்லை என்கின்றனர் பள்ளி நிர்வாகிகள்.

11ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் கவுன்சிலால் உருவாக்கப்படுவது. விடைத்தாள்கள் பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்படுவது.

இதில் 90 மாண்வர்கள் ஃபெயில் செய்யப்பட்டதால் அந்த மாண்வர்கள் பள்ளி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை இன்று நடத்தினர். பேச்சு வார்த்தையில் பலன் கிட்டவில்லை என்பதால் ஆசிரியர்கள் உட்பட பள்ளியின் அனைத்து ஊழியர்களையும் பள்ளிக்குள் வைத்துப் பூட்டி அடைத்து வைத்து மாண்வர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுமார் 52 ஊழியர்கள் பள்ளிக்குள் அகப்பட்டுக் கிடக்கின்றனர். இது குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்தும் போராட்டம் நடத்துவது மாணவர்கள் என்பதாலும், அதிலும் அதிக எண்ணிக்கையில் மாண்வர்கள் இருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
Source: http://tamil.webdunia.com/newsworld/news/national/1204/26/1120426033_1.htm

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator