யுத்த காலத்தில் இலங்கையின் வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர்களில்
120,000 பேர் இன்னும் இந்திய முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும்
தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.இவ்வாறு இந்தியாவில் உள்ளவர்களில் 23000 பேர் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்காலிக வீடுகள் இன்றி நிரந்தர வீடுகள் அமைத்துத் தருவதானால் மாத்திரமே இலங்கை வர விரும்புவதாக அவர் கூறியுள்ளனர்.
இருப்பினும் இந்தியாவில் உள்ள அகதிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுவதாக தமிழ் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
source: http://meenakam.com/2012/04/09/120000-sri-lankan-refugees-in-india.html#more-42603