கலைக்கேசரி இணையத்தளம் இன்று காலை சுப நேரமான 10.30
மணிக்கு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக
முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் மற்றும் கலைக்கேசரி ஆசிரியர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர் உரையாற்றினர்.
நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் பேசுகையில் ''தமிழ் மக்களுக்கு மாத்திரம் அன்றி, மக்கள் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டிய கடமைப்பாடு கலைக்கேசரிக்கு உண்டு. தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து உலகம் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், அவர்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாறு முதலியன குறித்து அவர்களுக்கு வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது.
எனவே இவற்றைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கலைக்கேசரிக்கும் உண்டு. அவற்றைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் கலைக்கேசரி பணியாற்றி வருகிறது. இப்பணியில் ஈடுபட்டிருக்கும் கலைக்கேசரி ஆசிரியர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, உதவி ஆசிரியர் பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கலைக்கேசரி ஆசிரியர் ''கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட மாத இதழான கலைக்கேசரி, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றைய இணைய உலகின் முக்கியத்துவம் கருதி இன்று முதல் கலைக்கேசரியை வாசகர்கள் அனைவரும் இணையத்தினூடாகவும் பார்வையிட்டுப் பயனடையலாம்.
எனவே இம்முயற்சி ஊடாக சகல இணைய வாசகர்களையும் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கிறது. கலைக்கேசரி தொடர்பாக எமக்கு சிறந்த வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் இம்முயற்சிக்காக முன்னின்று உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம்'' எனக் கூறினார்.
இன்று முதல் கலைக்கேசரி வாசகர்கள் www.kalaikesari.com என்ற இணையத்தள முகவரியூடாகக் கலைக்கேசரி இதழைப் பார்வையிடலாம். ___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37402

No comments:
Post a Comment