Monday, April 9, 2012

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த வியாபார வகானத்தின் சாரதி வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை பச்சிலைப்பள்ளி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கொழும்பிலிருந்து மரக்கறி ஏற்றிவந்த வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது. ஆதிகாலை 5மணியளவில் குறித்த வாகனத்தின் சாரதி வானம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியுள்ளார்.
இதனால் வானம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கடையுடன் மோதி பின்னர் அருகிலிருந்த இராணுவக் காவலரன் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தின் பின்னர் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று பளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது வாகனம் பெரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
Source: http://tamilwin.com/show-RUmqyETdOUlt5.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator