Friday, April 13, 2012

புதிய சக்தியாக சீனா உருவெடுத்து வருவதைத் தடுக்க - அமெரிக்கா முயல்வதாகக் கூறப்படுவதை நான் மறுக்கிறேன்: ஹிலாரி கிளிண்டன்


[Thursday, 2012-04-12 20:12:59]
சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.மேரிலேண்ட் பிராந்தியத்தில் உள்ள அன்னபோலிஸ் கடற்படை தளத்தில் உரையாற்றுகையில் ஹிலாரி கூறியதாவது, அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களை சந்திக்க தயாராகி வருகிறது.

புதிய சக்தியாக சீனா உருவெடுத்து வருவதைத் தடுக்க அமெரிக்கா முயல்வதாகக் கூறப்படுவதை நான் மறுக்கிறேன். அமெரிக்கா பழைய நண்பர்களை இழக்கப் போவதில்லை, புதிய எதிரிகளை அடையப் போவதுமில்லை. இன்றைய சீனா ஒன்றும் சோவியத் அல்ல. ஆசியாவில் புதிய கெடுபிடிப் போரின் விளிம்பில் நாம் இல்லை.
சீனா வளர்வது அமெரிக்காவுக்கு நல்லது, அமெரிக்கா வளர்வது சீனாவுக்கு நல்லது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆக்கபூர்வமான நல்லுறவு இருக்குமெனில், அது அமைதியான � வளமான ஆசிய � பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும்.
ஆசியாவில் உள்ள ஒரு சில வளர்ந்துவரும் சக்திகள், எப்போது ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும், எப்போது சர்வதேச அமைப்பிலிருந்து கழன்று கொள்ள வேண்டும் எனத் தேர்ந்தெடுத்துச் செயல்படுகின்றன. இது குறுகிய காலத்துக்குப் பலன் தரலாம். ஆனால் நீண்ட காலத்துக்குப் பலனளிக்காது.
அவை இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. புதிய அமைப்புகளை உருவாக்கவும் அவை முன்வர வேண்டும். அதேநேரத்தில் தனிநபர் சுதந்திரம், மனித மதிப்பு, வெளிப்படையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அந்த நாடு கொண்டிருக்க வேண்டும்.
சர்ச்சைகளை அமைதியாகத் தீர்க்கவும், மற்ற நாட்டு பிராந்திய ஒற்றுமையை மதிக்கவும் அந்நாட்டுக்குத் தெரிய வேண்டும். வளர்ந்து வரும் ஆசிய நாடுகளான சீனா, இந்தியா, இந்தோனேஷியா ஆகியவை அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு முறையால் வளர்ந்தவை. அந்த நாடுகள் மீது கூடுதல் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்றார் ஹிலாரி கிளிண்டன்.
source: http://www.seithy.com/breifNews.php?newsID=58515&category=WorldNews&language=tamil

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator