Saturday, April 14, 2012

பெண் சாமியாரை கொலை செய்து உடல் எரித்துவிட்டு தப்பியது மர்ம கும்பல்!

தென்காசி அருகே உள்ள அனந்தபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (58), விவசாயி. இவரது மனைவி பொன்னுதாய் (48). இவர் தினசரி சாமியாடி குறிசொல்வார். இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமானோர் பெண் சாமியார் பொன்னுதாயை வணங்கி குறி கேட்பார்கள். இவரும் பல்வேறு அம்மன் படங்களை வைத்து வேப்பிலை அடித்து சாமியாடியபடி குறி சொல்வார்.

இவர் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு பில்லி சூனியம் வைத்து இருந்தால், அதையும் எடுத்துக்கொடுப்பாராம். இவருக்கு 2 மகள்கள். 2 பேருக்கும் திருமணமாகிவிட்டது. நேற்று இரவு இவரது கணவர் முனியாண்டி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். வீட்டில் பெண் சாமியார் பொன்னுதாய் மட்டும் இருந்துள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மர்மக் கும்பல் பெண் சாமியார் பொன்னுதாய் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அவர்கள் தூங்கி கொண்டிருந்த சாமியார் பொன்னுதாயை வாயை பொத்தி கழுத்தை நெரித்தும் உருட்டுகட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து விட்டு ஓடி விட்டனர்.

 அதிகாலையில் பெண் சாமியார் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சென்று பார்த்த போது பெண் சாமியார் பொன்னுதாய் உடல் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் வயலில் படுத்திருந்த முனியாண்டிக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

 சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டிராஜ், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் குமார், தனிப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை நடத்தி னார்கள்.  பொன்னுதாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74086

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator