Friday, April 13, 2012

விஞ்ஞானியை விட அதிகளவு புத்திக் கூர்மையுள்ள நான்கு வயது சிறுமி

பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.

ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154ஆகும். ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.
பிரிட்டிஷ் மென்சாவின் தலைமை நிர்வாகியான ஜான் ஸ்டீவனேஜ் கூறுகையில், ஹெய்டியின் பெற்றோர் சரியான நேரத்தில் தங்கள் குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்து அவளை சரியான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றார். அவள் மென்சாவில் இணைந்து மேலும் சிறப்படையலாம் என்று வாழ்த்தினார்.
ஹெய்டியின் தாய் சோஃபி ஒரு கலைஞர், இவருக்கு ஐசக் என்ற 9 வயது மகனும் உண்டு. அவன் தேவாலயத்தின் பாடகர் குழுவில் இடம் பெற்றுள்ளான்.
Source: http://www.thinakkural.com/news/all-news/world/12744-2012-04-13-14-47-38.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator