Thursday, April 19, 2012

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் ஆறு கால்களுடன் குழந்தையொன்று பிறந்து உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை எந்த விதமான நலகுறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாகவும் உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற பெயருடைய ஆண் குழந்தையே இவ்வாறு பிறந்துள்ளது. எனினும் அக்குழந்தையின் ஏனைய 4 கால்களையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கைகளுக்காக கராச்சியிலுள்ள சிறுவர் சுகாதார பாதுகாப்பு தேசிய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் அலி ஷேய்க் (வயது 31) அப்சான்( வயது 27) என்ற தம்பதிக்கே, திருமணமாகி 5 வருடங்களின் பின் முதல் குழந்தையாக இக்குழந்தை பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது மகனின் உயிரினைப் பாதுகாத்து தருமாறு வைத்தியர்களை ஷேய்க்கின் தந்தை கேட்டுள்ளார்.
Source: 
http://www.thinakkural.com/news/all-news/world/13118-2012-04-19-19-52-29.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator