Wednesday, April 11, 2012

கொழும்பு செல்கிறார் தயான் ஜயதிலக! - மகிந்தவைச் சந்தித்து பேச முடிவு!!

பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜயதிலக அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ளார்.

பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் பதவியில் இருந்து தயான் ஜயதிலக நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவரின் கொழும்பு விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.



ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம் குறித்து தயான் ஜயதிலக வெளியிட்ட கருத்துத் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தயான் ஜயதிலக மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த தயான் ஜயதிலக தனது நற்பெயரைக் கெடுக்க சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பு செல்லவுள்ள அவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator