Saturday, April 14, 2012

அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன

சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின் வாழ்வியல் துன்பங்கள் வெளிவராதவையாகிப் போவது பெரும் சோகம்.


சுன்னாகத்தில் ஒரு சிறிய வீட்டில் குப்பிவிளக்கில் படித்த சிறுமி எரிந்து பலியாகிப் போக மறு புறத்தில் வானுயர்ந்த கோபுரங்கள், அதற்கு குடமுழுக்குகள் நடக்கின்றன. அதேநேரத்தில் புதுப்புது இடங்களில் சுருவங்கள் வைக்கும் போட்டி களும் நிறையவே நடந்து கொள்கின்றன. புத்தர் சிலையை நிர்மாணிக்கும் போது எதிர்க்கும் நாங்கள் புதுப் புதுப் இடங்க ளில் திட்டமிட்டு மதக்குறியீட்டுச் சின்னங்களை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் அக்கறை அற்றவர்களாக இருக்கின் றோம். இந் நிலைமை எதிர்காலத்தில் மதக் கலவரங் களை ஏற்படுத்துவதற்கான அத்திபாரமாகும். தனியார் காணியா யினும் அரச காணியாயினும் புதிதாக பன்சாலை கட்டுதல், ஆலயம் அமைத்தல், தேவாலயம் கட்டுதல், மசூதிகள் நிர் மாணித்தல் என்பன தடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு மதஸ்தலங்கள் புதிதாக அமைப் பதாயின் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு மிகவும் இறுக்க மான சட்டதிட்டங்களை கொண்டுவரவேண்டும். குறிப்பாக உள்ளூராட்சி சபைகள் விழிப்பாக இருக்கும் பட்சத்தில் அதிரடியாகத் தோன்றும் சுருவங்களை தடுக்க முடியும். போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகள் தங்களுக்கு இருக் கக் கூடிய கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் போது, நாங்களோ மதத்தால் பிரிவு பட்டு தத்தம் சமயங் களை நிலைநிறுத்த முற்படுகின்றோம்.

மனித தேவைகள் எத்தனையோ இருக்கும் நேரத்தில் ஏற்கெனவே இருக்கக் கூடிய ஆலயங்களில், தேவாலயங்களில் வழிபடுவதற்கு ஆட்கள் இல்லாமல் இருக்கும் போது, புதிது புதிதாக தெய்வச் சிலைகளை, சுருவங்களை அமைத்து எதைத் தான் நாம் சாதிக்கப் போகின்றோம்? ஓ இறைவா! அதோ ஒரு ஏழைச்சிறுமி வாழ வேண்டிய வயதில் எரிந்து கருகிக்கிடக்கிறாள். ஆனால் இங்கோ சீமெந்தும் மண்ணும் கல வையாக்கப்படுகின்றன கடவுள்களைக்கட்டுவதற்கு. எப்படி எங்கள் சமூகம் எழுச்சி பெறும்? 

Source: http://www.valampurii.com/online/viewnews.php?ID=28143

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator